Posts

Showing posts from June, 2018

ஆன்மாவைத் தேடி… !

Image
“முன்னேற வழிகளைத் தேடிய போது என்னைத் தொலைத்து விட்டேன் இப்போது என்னை மீண்டும் தேடுகிறேன் முன்னேற்றங்கள் தொலையத் தொடங்கி விட்டன”. ~ தமிழன்பன் . தமிழன்பனின் கவிதைகள் மிகவும் எளிமையாக இருக்கும். ஆனால் அது உள்ளடக்கத்தினாலும் வடிவ அமைப்பு ரீதியாகவும் கலைப்படைப்பு என்பதில் ஐயமில்லை. தமிழன்பன் மேற்குறிப்பிட்ட கவிதையில் முன்னேற்றம் என்பது materialistic வாழ்வை குறிக்கிறது. வள்ளுவன் சொல்லும் “ பொருளிள்ளாற்கு இவ்வுலகம் இல்லை” என்பதுதான் இது. கவிதையில் வரும் இன்னொரு முன்னேற்றம் என்பது ஆன்மாவைக் குறிக்கிறது. பொதுவாக எல்லோரும் சொல்வது போல இந்த நடுத்தர வர்க்கத்தின் யுவன் யுவதிகளுக்கு இந்த அலைச்சல் ஏற்படுவது இயல்பே. அதுவும் எழுத்து சார் துறையில் ஆர்வம் இருந்து வாழ்வை தொலைத்தவர்களின் கதை பாரதி, புதுமைப்பித்தன், சி.சு.செல்லப்பா என்று இப்பொழுது வரைக்கும் நீண்டுகொண்டே உள்ளது. நீண்டுகொண்டே இருக்கும். எதுவரை என்று சொல்ல முடியாது. வேறெதாவது என்றாலும் ஓரளவுக்கு நல்ல வாழ்க்கை அமையும் துறைகள் இருக்கிறது. அதில் உங்கள் ஆன்மாவை தொலைக்க தேவையில்லை. சரிக்கு சமம் பொருள் கிடை