Posts

Showing posts from January, 2020

ரூஹ் - லஷ்மி சரவணக்குமார்.

Image
விமர்சனம் என்பது நல்ல படைப்புகள் பற்றி மட்டுமே எழுதுவது என்ற குறுகிய பார்வை நிலவி வருகிறது. கட்டுரை போட்டிகளில் இதுவரை பரிசு பெற்ற கட்டுரைகள் எல்லாம் அந்த வகையிலே இருப்பது ஆரோக்கியமானதாக தோன்றவில்லை. எனது அனுபவம் கசப்பாகவே இருந்து வருகிறது.  விமர்சனம் என்பது எந்த படைப்பு பற்றியும் தனதளவில் நேர்மையான ஒன்றாக இருந்தால் போதும். மேலும் நல்ல படைப்பை விட சுமாரான படைப்புகளுக்கும் மோசமான படைப்புகளுக்கும் தான் விமர்சனங்கள் தேவைப்படுகிறது என்பது என்னுடைய திடமான கருத்து. ( அழிசி கட்டுரைப் போட்டி 2019 க்கு எழுதப்பட்டது. தேர்வாகும் தகுதியில்லை என்று முடிவு வெளியிடப்பட்டது 😂). விதிமுறைகளின் படி நான் எடுத்துக் கொண்ட நாவல் - ரூஹ். லட்சுமி சரவணகுமார் எழுதியது. அமேசான் கிண்டலில் கிடைக்கிறது. விலை ₹45 மட்டுமே. "தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே..". என்ற முன்னுரை தலைப்பிலேயே கதையின் மையத்தை ஆசிரியர் தெளிவு படுத்திவிடுகிறார். இது நாவலில் எவ்வாறு தொழிற்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம்.  ஆரம்ப நிகழ்வு நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திருவிழ