Posts

Showing posts with the label non fiction

டி20 கிரிக்கெட்டில் கொம்பன்..! ஆனால், டெஸ்ட்டுகளில்?

Image
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா அடுத்து 2-3 வருடங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் உலகை ஆளும் என்றே கணிக்கிறேன். மாறாக, டெஸ்ட் போட்டிகளில் மண்ணைக் கவ்வும். அதற்கான காரணங்களை பார்ப்போம்.  முதலும் முக்கியக் காரணமாக ஐபிஎல் தொடரைச் சொல்லலாம். தெரிந்தோ தெரியாமலோ பிசிசிஐ இதைக்கொண்டு வந்தது மிகப்பெரிய நல்லது. (பாதகமும் இருக்கிறது கடைசியில்) இந்தியாவில் எவ்வளவு திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு தொடராகவே ஐபிஎல் இருக்கிறது. இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக மட்டுமல்ல எல்லா இடங்களிலும் களமிறங்க பல பல வீரர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்தியா ஏ, பி, சி, டி என 4 அணிகளை உருவாக்கும் அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதே நம்பமுடியாத உண்மை.  தொடக்க வீரர்களுக்கு - ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக், சாம்சன், ருதுராஜ், இஷான் கிஷன், படிக்கல்.  3,4ஆம் இடத்துக்கு - சூர்ய குமார், ஷிவம் துபே,திலக் வர்மா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ், கே.எல்.ராகுல், துருவ் ஜூரேல், ஷஷாங் சிங், ரமன்தீப் சிங், சாய் சுதர்சன், ரஜத் படிதார்....

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?

Image
ஒரு படைப்பின் படமாக்கல்முறை என்பது அதன் நோக்கத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டுமே அன்றி 'இப்படி எடுக்கலாம் அப்படி எடுக்கலாம்' என முன்தீர்மானித்துவிட்டு அதற்குள் கதையைக் கொண்டுவந்து அடைத்தால் அது துருத்திக் கொண்டுதான் தெரியும்! சினிமா என்பது காட்சி ஊடகம்; திரை மொழி என இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் மூச்சுக்கு 300 முறை நேர்காணல்களில் கூறுகிறார். அவர் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால், அவர் செய்திருப்பது?  அப்படியே தலைக்கீழானது.  ஒரேயொரு பிரேமில் காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்களை 5-20 நிமிடங்கள்வரை ஏன் காட்ட வேண்டும்?  எடிட்டிங் என்ற ஒன்று சினிமாவில் எதற்கு இருக்கிறது? இது மேடை நாடகமா? அல்லது ஆவணப் படமா? அதில்கூட இவ்வளவு நேரமிழப்பு இருக்காதுபோல! 20-30 நிமிடங்களில் எடுக்க வேண்டியதை 100 நிமிடங்கள் எடுத்திருப்பது எழுத்தில் போதிய சரக்கு இல்லை என்பதின் பிரதிபலிப்பே.  சினிமாவில் நீளமான காட்சிகளுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. முக்கியமான இடத்தில் வந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். அல்லது 1971 படம் மாதிரி ஒரு த்ரில்லர் / உயிர் பிழைப்பு போன்ற நேரங்களில் அதைப் பயன்படு...

Ante sundaraniki ஏன் சிறந்த கமர்ஷியல் படம்?

Image
  ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை நமது தென்னிந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருக்கும் ஆசைதான். அப்படிப்பட்ட ஆசைக் கொண்ட சிறுவன் சந்திக்கும் முதல் முயற்சியே ஆகப் பெரும் தோல்வியில் முடியும். இதனால் இனிமேல் அந்த முயற்சியே கூடாதெனும் அப்பா. ஆதரவு தெரிவித்த அம்மாவும் தவறாகிவிட்டதற்கு குற்றவுணர்வில் தத்தளிக்கும் கதாபாத்திரம். ஐயர் குடும்பம். கலாச்சாரம் அது இது என்று கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம். ஹீரோ ஆகிறேனென செய்த சேட்டைகளே அவனை கேலி செய்யவும் உதவுகிறது.  உண்மையில் ஒருவன் ஜெயிக்கும் முன்பு எதுவுமே பேசக்கூடாது. தோற்றுவிட்டால் அதுவே அவனை படுகுழியில் தள்ளிவிடும். அஞ்சான் லிங்குசாமி முதல் பீஸ்ட் நெல்சன் வரை பார்த்து விட்டோம்.  இப்படியாக நகைச்சுவையாக தொடங்கும் நானி கதாபாத்திரம் பிற்காலத்தில் ஹீரோ ஆனாரா இல்லையா என்பது மட்டுமே கதையல்ல. இந்த கதாபாத்திரம் வைத்துக்கொண்டு சகல மீறல்களையும் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர்.  ஏற்கனவே காதலித்து பிரிந்த ஹீரோயின். முதன் முறையாக காதலிக்கும் ஹீரோ. இதுவே தெலுங்கில் மிகப்பெரிய மீறல் தான். எவ்வளவு நாளைக்கு தான் ஆணின் காதலுக்கு பெண்...

இக்கால மாணவர்கள் : ஜெயமோகனும் எதிர் தரப்பினரும்

Image
  எவ்வளவோ பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது எல்லோரது வாழ்க்கையிலும். இதில் இதை பேச வேண்டுமா? ஆமாம். வரும் தலைமுறையே நமது பள்ளி மாணவர்கள் தான். அவர்களை பற்றி பேசுவது நமது குழந்தைகளை பற்றி பேசுவது போல மிகவும் முக்கியமானது. இன்ஸ்டாகிராமில் தான் முதன் முதலாக ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை இழிவாக பேசிவிட்டார் என்ற பதிவினை பார்த்தேன். அதை எழுதியவர் அழகிய பெரியவன். அவரது கதைகளையும் படித்துள்ளேன். இரண்டு முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. அவரது பதிவு லிங்க் இங்கே . அதை படித்து விட்டு ஜெயமோகன் என்ன எழுதியுள்ளார் என்றும் பார்த்து  விடலாம் என்று பார்த்தேன். அதன் லிங்க் இங்கே . இரண்டையும் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். ஜெயமோகனையும் வாசித்து இருக்கிறேன். முதலில் பெரும் ஈடுபாடு கொண்டு படித்து பின்னர் விலகியும் இருக்கிறேன். இருவரது கதைகள் பற்றி வேறொரு நாளில் கட்டுரை எழுத வேண்டும். சரி இப்போது இந்த பிரச்சினைக்கு வருவோம். ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே பார்ன் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். உண்மையில் எல்லோருமே  ( தனியார் பள்ளி மாணவர்கள் கூட ) பார்க்கி...

Selfie Shalu எனும் வசீயக்காரி :

Image
  Dance பிடித்தவர்களுக்கு 100% செல்பி ஷாலுவை பிடிக்கும் என்பது எனது அபிப்பிராயம்.  Without Passion இப்படி எல்லாம் ஆடவே முடியாது. அப்படியென்ன பெரிய டேன்ஸரா என்று கேட்பவர்களுக்காக இந்த ரைட்டப்.  சிறந்த டேன்சருக்கான, கூகுள் ஆண்டவரிடம் விசாரித்ததில் கிடைத்த பொதுவான சிறப்பம்சங்கள்: body, action, space, time and energy.  நாம் பின்னிருந்து ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எனர்ஜி. செல்பி ஷாலுவிடம் அபாரமான எனர்ஜி இருக்கிறது. இதோ கீழே உள்ள பாடலை பாருங்கள். குட்டி ஜோதிகா | மினி ஜோதிகா | ஜோதிகா லைட் | ஜோதிகா தங்கச்சி என்று எத்தனை விதமாகவும் சொன்னாலும் அதே அர்த்தம் தான். அந்த அளவுக்கு நேர்த்தி. எனர்ஜி. கிரேஸ்.  நயன்தாராவுக்கு டான்ஸ் வராது. பிகில் படத்தில் நயன்தாரா கஷ்டப்பட்டு ஒரு டான்ஸ் ஆடியிருப்பார் விஜய்யுடன். அதில் ஆடத்தெரியாதவர்களின் சாயல் அப்படியே தெரியும். ஆடத்தெரியாமலும் அதை முயற்சி செய்யும் போதிலும் ஒரு அழகு தானாகவே வந்தடைந்திருக்கும் நயன்தாராவிடம் அந்த பாடலில். அதே  imperfections ஐ perfect ஆக அந்த அழகமைதி குறையாமல் ஷெல்பி ஷாலு தனது வீடியோவில் கொண்டு வந்திருப்பார்....

திராவிட அழகி

Image
  " கருப்பா  இருக்காளே ! இவளா ஹீரோயின்? " " ஆம்பள மாதிரி இருக்காளே " என்ற stereotype படுத்தப்பட்ட சமூகத்தில் பாலுமகேந்திரா ஆசைப்பட்ட திராவிட அழகை கொண்டு வந்ததுற்கு பா. ரஞ்சித்திற்கு  எவ்வளவு தூரம் நன்றி சொன்னாலும் தகும்.  சார்பட்டா படம் பற்றி சமூக வலைதளங்களில் ஏற்கனவே பலரும் எல்லா கோணங்களில் படத்தினை அலசி ஆராய்ந்து எழுதி எழுதி சலிக்க வைத்து விட்டனர். அதிலும் ரங்கன் வாத்தியார் அவரது மனைவியுடன் சில நொடி காதலை கூட சிலாகித்து விட்டனர் 😆. உண்மையில் இது தமிழ் சினிமாவில் ஒரு மைல்கள் என்றே சொல்லலாம். முக்கிய காரணம் அந்த கதாபாத்திரங்கள். தமிழில் இவ்வளவு துணை கதாபாத்திரங்களில் ( வேம்புலி, டேன்ஸிங் ரோஸ், டாடி, ரங்கன் வாத்தியார், வெற்றி, மாரியம்மாள், ரோஸியம்மா, மீரன், ராமன், மாஞ்சக்கண்ணன்,தணிகா,பீடி வாத்தியார்...) உயிர்ப்பு மிளிரியது மெட்ராஸ் படத்திற்கு பிறகு இதிலேதான். வடசென்னை யில் அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் அது இந்த அளவுக்கு இல்லை. சார்பட்டா படம் எப்படி கமர்ஷியல் படம் எடுப்பதற்கான ஒரு பாடமாகவே வரும் காலங்களில் இருக்கும் என்பது என் கணிப்பு. மராத்தியில் Sairat படம் எப...

தகப்பனை கண்டடைதல்

Image
துருக்கிய இயக்குனர் Nuri Bilge Ceylonனின் The Wild Pear Tree என்ற படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என்பது என் துணிபு. அதன் கரு தந்தையை கண்டடையதல்.  மாம்பழத்தின் கொட்டையை சுற்றி வளரும் சதைப்பகுதி போல படத்தின் கருவை சுற்றி இருக்கும் நிகழ்வுகள் மிகவும் ருசியானது. துருக்கியின் நிலப்பரப்பை அந்த நிலங்களின் மரங்களை காற்றினை நம் கண்களுக்கு முன்னால் இயக்குனரால் எளிமையாக காட்டிவிட முடிகிறது. லிட்ரலி நாம் அங்கு வசிக்க துவங்கி விடுகிறோம். Local is International என்ற வாக்கியத்தை நிறைவு செய்யும் படம். துருக்கியின் Nativityயை பார்த்தது போலவே இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரம் கல்லுரியை முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவன். கூடவே தான் எழுதிய நாவல் ஒன்றை பதிப்பிக்க பதிப்பகத்தாரை தேடித் திரிந்து கொண்டிருப்பான். அவ்வப்போது அவன் சந்திக்கும் மக்கள் அவர்களுடனான அவனது உரையாடல்கள் அனைத்துமே அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். முன்னால் காதலியுடன் ஒரு எழுத்தாளருடன் நண்பர்களுடன் பதிப்பகத்தாருடன் என்று எல்லாமே மனதில் நிற்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது....

ரூஹ் - லஷ்மி சரவணக்குமார்.

Image
விமர்சனம் என்பது நல்ல படைப்புகள் பற்றி மட்டுமே எழுதுவது என்ற குறுகிய பார்வை நிலவி வருகிறது. கட்டுரை போட்டிகளில் இதுவரை பரிசு பெற்ற கட்டுரைகள் எல்லாம் அந்த வகையிலே இருப்பது ஆரோக்கியமானதாக தோன்றவில்லை. எனது அனுபவம் கசப்பாகவே இருந்து வருகிறது.  விமர்சனம் என்பது எந்த படைப்பு பற்றியும் தனதளவில் நேர்மையான ஒன்றாக இருந்தால் போதும். மேலும் நல்ல படைப்பை விட சுமாரான படைப்புகளுக்கும் மோசமான படைப்புகளுக்கும் தான் விமர்சனங்கள் தேவைப்படுகிறது என்பது என்னுடைய திடமான கருத்து. ( அழிசி கட்டுரைப் போட்டி 2019 க்கு எழுதப்பட்டது. தேர்வாகும் தகுதியில்லை என்று முடிவு வெளியிடப்பட்டது 😂). விதிமுறைகளின் படி நான் எடுத்துக் கொண்ட நாவல் - ரூஹ். லட்சுமி சரவணகுமார் எழுதியது. அமேசான் கிண்டலில் கிடைக்கிறது. விலை ₹45 மட்டுமே. "தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே..". என்ற முன்னுரை தலைப்பிலேயே கதையின் மையத்தை ஆசிரியர் தெளிவு படுத்திவிடுகிறார். இது நாவலில் எவ்வாறு தொழிற்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம்.  ஆரம்ப நிகழ்வு நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திர...

அறைகுறையான ஆடை :

Image
" அமலாபால் ஆடையின்றி‌ நடித்திருக்கும் படம் ஆடை" என்றவாறு விளம்பரப்படுத்தி எடுக்கப்பட்ட  படத்தை பற்றிய எனது பார்வையை முன்வைத்துள்ளேன். ஆடை டீசரில் இருந்த அடர்த்தி ட்ரெய்லரில் இல்லை என்பதை அனைவருமே அறிவர். படத்தில் அது எவ்வாறு இருந்தது?.  முதலில் மையக் கதாபாத்திர வடிவமைப்பை பற்றியும் அதன் வளர்ச்சி வீழ்ச்சியில் திரைக்கதை எப்படி இருந்தது என்பதை சொல்ல விழைகிறேன். கோயிலுக்கு செல்ல விரும்பாத புடவை அணிய விரும்பாத மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பை தராத (இதிலேயும் கேள்வி குறி உள்ளது ஏனெனில் தாயின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து புடவையணிந்து செய்தி வாசிப்பது) சுவாரஸ்யத்திற்காக தனது அகங்காரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தற்கால பெமினிஸ்ட். இதில் பெமினிஸ்ட் என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஆரம்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்றிற்காக தான் பழிவாங்கப்படுகிறோம் என்பதை படத்தின் இறுதியில் மையக் கதாபாத்திரத்திற்கு தெரிகிறது. பார்வையாளர்களான நமக்கும் அப்போதுதான் தெரியும். உடனே மையக் கதாபாத்திரம் மனமாற்றம் அடைந்து விடுகிறது. அந்த முக்கியமான திரைக்கதையின் நம்பகத்தன்மை போலியான...

ஆன்மாக்களின் ஜேப்படி- கானகன்:

Image
2016 ஆம் ஆண்டு யுவபுரஸ்கர் விருது வென்ற, லஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் நாவல் பற்றிய எனது வாசிப்பு அனுபவம். இது ஒரு புலி வேட்டையில் தொடங்கி புலி அவனை வேட்டையாடுவதில் முடிவடைகிறது. தங்கப்பன் என்பவன் அந்த வேட்டைக்காரன். அவனுக்கு மூன்று மனைவிகள். மாரி, சகாயராணி, செல்லாயி. கடைசி மனைவியின் மகன் வாசி. வாசியின் தந்தை சடையன். தங்கப்பனின் நண்பன் அன்சாரி. இவர்களுடன் காடுகளும் புலிகளும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள். இதில் புலியின் நீதியுணர்ச்சியும் தகப்பன் மீது மகன் கொண்டிருக்கும் வெறுப்பும் தான் முக்கியம். அத்துடன் இந்நாவலில் ஆன்மாக்கள் பற்றி நிறையவே வருகிறது. அந்த ஆன்மாவை ஆராயும் ஒரு முயற்சி.   கதை நடக்கும் காலகட்டம் எம்ஜிஆர்  காலகட்டம். சரி. அந்தக் காலத்தில் மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி இருந்ததா ? பள்ளிக் கூடமும் இல்லை. உலகத்தையே துறந்து தனித்து வாழும் மக்களென எழுத்தாளரே தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த நிலையில் புலி வேட்டையின் போது ஃப்ளாஷ் லைட் உபயோகித்தாக எழுதுகிறார். இந்த கருவிகள் இந்த காலகட்டத்தில் இருந்ததா என்பது எல்லாம் தகவல்கள் குறைவு. எழுதப்படிக்காத சினிமா கூட பா...