Selfie Shalu எனும் வசீயக்காரி :
Dance பிடித்தவர்களுக்கு 100% செல்பி ஷாலுவை பிடிக்கும் என்பது எனது அபிப்பிராயம். Without Passion இப்படி எல்லாம் ஆடவே முடியாது. அப்படியென்ன பெரிய டேன்ஸரா என்று கேட்பவர்களுக்காக இந்த ரைட்டப்.
சிறந்த டேன்சருக்கான, கூகுள் ஆண்டவரிடம் விசாரித்ததில் கிடைத்த பொதுவான சிறப்பம்சங்கள்: body, action, space, time and energy.
நாம் பின்னிருந்து ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எனர்ஜி. செல்பி ஷாலுவிடம் அபாரமான எனர்ஜி இருக்கிறது. இதோ கீழே உள்ள பாடலை பாருங்கள். குட்டி ஜோதிகா | மினி ஜோதிகா | ஜோதிகா லைட் | ஜோதிகா தங்கச்சி என்று எத்தனை விதமாகவும் சொன்னாலும் அதே அர்த்தம் தான். அந்த அளவுக்கு நேர்த்தி. எனர்ஜி. கிரேஸ்.
நயன்தாராவுக்கு டான்ஸ் வராது. பிகில் படத்தில் நயன்தாரா கஷ்டப்பட்டு ஒரு டான்ஸ் ஆடியிருப்பார் விஜய்யுடன். அதில் ஆடத்தெரியாதவர்களின் சாயல் அப்படியே தெரியும். ஆடத்தெரியாமலும் அதை முயற்சி செய்யும் போதிலும் ஒரு அழகு தானாகவே வந்தடைந்திருக்கும் நயன்தாராவிடம் அந்த பாடலில். அதே imperfections ஐ perfect ஆக அந்த அழகமைதி குறையாமல் ஷெல்பி ஷாலு தனது வீடியோவில் கொண்டு வந்திருப்பார். நான் எதுவும் அதிகமாக சொல்லவில்லை. எனக்குமே இந்த Romanticize பிடிப்பது இல்லை. ஆனால் ஷாலு நிஜமாகவே ஒரு Perfectionist. ஜோதிகா பாடலுக்கு ஜோதிகா வாகவும் நயன்தாரா பாடலுக்கு நயன்தாராவாகவும் மாற முடிகிறது. இது அசாதாரணமான திறமை.
https://www.instagram.com/reel/CQAs4YXhwKP/?utm_medium=copy_link
There's no over rate. She's extra ordinary performer.
அதுமட்டுமின்றி எவ்வளவோ பேர் இருக்கிறார்கள் இன்ஸ்டாகிராமில். யாருமே செல்பி ஷாலு போல (choice of songs ) பாடலை தேர்வு செய்வதில்லை. எல்லோருமே டிரெண்டிங் எனும் குழியில் விழுந்து உடலின் பாகங்களை காட்டி ( intentions should be erotic) எல்லோரையும் கவர்வதற்காகவே இருக்கும். ஆனால் ஷெல்பி ஷாலு இந்த ரகமே கிடையாது. பெரும்பாலான பாடல்கள் 90' களில் வெளிவந்த பாடல்களாகவே இருக்கும். அந்த பாடல்களுக்கு ஏற்ப ஆடுவதே பெரிய வேலை. அதற்கேற்ப உடை அணிந்து அலங்காரம் செய்து முடிந்த அளவுக்கு Location அதேமாதிரி தேர்வு செய்து ஆடுவது என்பது மிகப் பெரிய உழைப்பு. இந்த Dedication இன்ஸ்டாகிராமில் யாருக்குமே இல்லை என்பது எனது அவதானிப்பு. A true artist twinkle in the sky like a superstar Even nobody appreciated. She's a star Performer, Dancer. ஓஷோ சொல்வது போல தனது உலகமாகவே டான்ஸூடன் இணைந்தால் மட்டுமே இந்த அளவுக்கு ஆட முடியும்.
Time : வரிகளுக்கு ஏற்ப உதட்டசைவு நடனம் ஆடுவதில் டைமிங் மிகவும் முக்கியமானது. இதில் ஷெல்பி ஷாலு 100%.
இவரது வீடியோ 15 நொடிகள் தான் பெரும்பாலும். இதுவே தனி ரசனை. மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது. அநேகமாக ஒரு பாடலை 2,3 பார்ட்டாக வெளியிடுவது நல்ல யோசனை. அழகாக இருப்பவர்கள் புத்திசாலித்தனமாகவும் இருக்கும் போது ஒரு அற்புதம் நிகழ்கிறது. நானெல்லாம் கிட்டத்தட்ட 50 முறைக்கு மேல் பார்ப்பேன் ஒவ்வொரு வீடியோவையும். வலது கையில் தோள்பட்டைக்கு அருகில் ஒரு மச்சம் இருக்கிறது.
இடது கண்ணுக்கு கீழே மருவு மாதிரி ஒன்று இருக்கும்.Space : ஷாலு வுக்கு பெரும்பாலும் long shot தான் எல்லா பாடல்களும். அந்த கேமிராமேனுக்கு நன்றி. குளோசப்பை விட இதில் தான் அழகு என்று முதலில் நம்பி வந்தேன். அப்படியெல்லாம் இல்லை. ரம்ஜானுக்கு வாழ்த்து தெரிவிக்கும் அன்று நீலக்கலர் புடவை அணிந்து பேசும் வரை. அடடா அடடா என்ன ஒரு அழகு. Obsession ஆகி விட்டது ஷாலினி முகம் கூட. 😕 . அதன் லிங்க் : https://www.instagram.com/p/COzWbCYhGMo/?utm_medium=copy_link
ஷாலுவை Behindwoods எப்படி இன்னும் இன்டர்வியூ எடுக்காமல் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம். எடுத்தால் என்ன வேலை செய்கிறார் எவ்வளவு சம்பாதிக்கிறார் சிங்கிளா கமிட்டடா யார் ஸ்பான்சர் செய்கிறார்கள் என்ற விவரங்கள் இளைஞர்களுக்கு தெரிந்துவிடும்.
Action : முக பாவனைகள் அத்தனையும் அழகு. கிட்டத்தட்ட அனைத்து பாடல்களுக்கும் அதேமாதிரி ஆடுவது என்பது சாதாரணமான விஷயம் அல்ல. அதற்கு எடுக்கும் பயிற்சி நிறையவே இருக்கும். Hats off . வேலை செய்கிறாரா தெரியவில்லை. அப்படி இருந்தால் இதெல்லாம் செய்வதற்கு எப்படி நேரம் ஒதுக்குகிறார் என்பது நாம் கற்றுக் கொள்ள வேண்டும். அவரது நேர்காணலுக்கு காத்திருக்கிறேன்.
குத்து பாடல்களுக்கு இவரது டான்ஸ் எல்லாவற்றையும் விட சிறிது அழகு கூடி விடுகிறது. பார்த்து விட்டு சொல்லவும்.
Body :
இறுதியாக உடலமைப்பு. திறமை இருக்கிறது. அதனுடன் உடலழகு இருக்கும் போது யாரும் தடுத்து விட முடியாத வெற்றி வந்து சேரும் என்பதே வரலாறு நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். நிறைய முறை சொல்லிவிட்டேன். மீண்டும் ஒரு முறை. அழகு என்பது நிறமே அல்ல. உடல் தான் அழகு. அந்த வசீகரம் ஷாலுவிடம் நிறையவே இருக்கிறது. ஆபாச நடனமேதுமில்லை ஆனாலும் வசீகரிக்கும் நடனங்கள் எல்லாமே. Keep the body fit and dance more and more.
ஜோதிகாவுக்கு பிறகு ஜீன்ஸ் அல்லது பேண்ட் ஷெல்பி ஷாலுவுக்கே பொருத்தமாக இருக்கிறது. புடவை கட்டினாலும் அழகாக இருக்கிறது. கல்யாணம் என்ற ஒன்று செய்தால் இப்படி ஒரு பெண்ணை செய்ய வேண்டும்.
நம்ம வீட்டு பொண்ணு மாதிரி இருக்காங்க. வெளிநாட்ல இருந்தாலும் நம்ம ஊரோட வாசனை தான் அதிகமா வீசுது. ஒரு self confession. எனது பிரியமான தோழி போலவே ஷாலு வுக்கும் மூக்கு சிறிது imperfect . மூக்கி. பிறகு அந்த கண்கள். ஷெல்பி ஷாலுவை பார்க்கும் போதெல்லாம் அவள் நினைவு வராமல் இல்லை. ஒவ்வொரு பாடலையும் ஆயிரம் முறை பார்ப்பதற்கு இது ஒரு கூடுதல் காரணமே தவிர இது மட்டுமே அல்ல. ஷெல்பி ஷாலுவின் உழைப்பும் திறமையுமே...
பொறுமையாக எல்லா கமெண்ட் க்கும் பதில் சொல்லும் பண்பு மிகவும் அரிது. ஆனால் இதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும். அட்வான்டேஜ் எடுத்துக்கொள்ள கூடாது. வேண்டுமென்றே ஹாய் சொல்லுங்க அக்கா தங்கச்சி மேடம் என்று லைனில் நிற்பது சீக்கிரத்திலேயே ரிப்ளை செய்பவர்களுக்கு சலிப்பை தந்துவிடும். அந்த வகை மக்கள் திருந்தப்போவதில்லை. அன்பை தான் அப்படி வெளிக்காட்டுகிறார்கள் போலும். அன்பை வெளிப்படுத்துங்கள் சலிப்பு ஏற்படுத்தாமல்.
உழைப்புக்கு ஏற்ற மரியாதை அல்லது புகழ் (அல்லது வருமானம்?) கிடைத்ததா என்றால் குறைவுதான். ( லைக்ஸ் ஃபாலோவர்ஸ் குறைவு ). இப்போது இல்லாவிட்டாலும் சீக்கிரமே அந்த புகழின் உச்சத்தை அடைந்து விட வேண்டும்; மேலும் இவரது கனவு அல்லது ஆசை என்று எதாவதிருந்தால் அது நிறைவேற வேண்டுமென இல்லாத ஆண்டவனை நான் பிரார்த்திக்கிறேன்.
Comments
Post a Comment