Posts

Showing posts from June, 2020

தகப்பனை கண்டடைதல்

Image
துருக்கிய இயக்குனர் Nuri Bilge Ceylonனின் The Wild Pear Tree என்ற படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என்பது என் துணிபு. அதன் கரு தந்தையை கண்டடையதல்.  மாம்பழத்தின் கொட்டையை சுற்றி வளரும் சதைப்பகுதி போல படத்தின் கருவை சுற்றி இருக்கும் நிகழ்வுகள் மிகவும் ருசியானது. துருக்கியின் நிலப்பரப்பை அந்த நிலங்களின் மரங்களை காற்றினை நம் கண்களுக்கு முன்னால் இயக்குனரால் எளிமையாக காட்டிவிட முடிகிறது. லிட்ரலி நாம் அங்கு வசிக்க துவங்கி விடுகிறோம். Local is International என்ற வாக்கியத்தை நிறைவு செய்யும் படம். துருக்கியின் Nativityயை பார்த்தது போலவே இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரம் கல்லுரியை முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவன். கூடவே தான் எழுதிய நாவல் ஒன்றை பதிப்பிக்க பதிப்பகத்தாரை தேடித் திரிந்து கொண்டிருப்பான். அவ்வப்போது அவன் சந்திக்கும் மக்கள் அவர்களுடனான அவனது உரையாடல்கள் அனைத்துமே அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். முன்னால் காதலியுடன் ஒரு எழுத்தாளருடன் நண்பர்களுடன் பதிப்பகத்தாருடன் என்று எல்லாமே மனதில் நிற்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  எல்லா ஆ

அகாலம்

Image
இழவு வீட்டின் பிராதன ஊதுபத்தி வாசனை அந்த இடத்தை ஆக்கிரமித்து நெடுநேரமாகிறது. அதை அணையவிடாமல் மேலும் மேலும் எரியவைக்க ஒரு கூலியில்லா ஆளும் நியமிக்கப்பட்டிருந்தார். அழுது அழுது தொண்டை வற்றிப்போயி கோமதியம்மாள் நடையின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கிறாள். சில ஆட்களும் அதே கலைப்பில் அமைதியாக இருந்தனர். அந்த அமைதி சற்று பயங்கரமாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் தூரமாக ஒரு திண்ணையின் ஓரத்தில் இருந்தோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த கோமதியம்மாளின் கணவர் ராமையாவுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்து அந்த கணத்தை குழைத்தது. அழைப்பை எடுத்ததும் ," ரே மாப்ள பின்னிகா ஃப்ளைட் எக்கி ராரா. சந்தோஷூ பாய்ல படி சச்சிபோயினாடுரா...." என்று தங்கள் மேல் குற்றமில்லை என்பதை அழுதுக்கொண்டே நிரூபிக்க போராடினார். மறுமுனையில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. அழைப்பை துண்டித்ததும் அவர் " ஞேனு ஏன்டிக்கு ஏடித்துதனே தெல்லேதுரா ஞைனா..." என்று எனது தோலை பிடித்தார்.  அழுது ஓய்ந்திருந்த கூட்டம் புத்துயிர்ப்பு அடைந்தது.  கோமதியம்மாளே ஆரம்பித்தாள். " ஐயோ... மா அல்லுடு ஒச்சி அடுக்குதுடே ஞேனு ஏமி செப்பேதி.. நா தெகிர உந்