Posts

Showing posts from March, 2018

இடையில் ஓடும் நதி - கூகி வா திவாங்கோ

Image
இது கிக்கியு மொழியில் எழுதப்பட்ட கென்ய நாவல் பிறகு ஆசிரியர் கூகிவா திவாங்கோவினாலே       (Ngũgĩ wa Thiong'o) ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. The river between என்று கூகிளில் தேடினால் கிடைக்கும். தமிழில் இரா.நடராசன் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலம் தெரியாத என்னைப் போன்ற தற்குறிகள் தமிழிலேயே படிக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் சாகித்யம் எனக்கு இல்லை என்றாலும் படிக்க நன்றாகவே இருந்தது.  கென்யாவின் பழங்குடி மக்களின் பற்றிய கதை. அந்த மக்களின் கலாச்சார வாழ்வியலை பேசுகிறது. கலாச்சாரம் என்பதே காலத்திற்கேற்ப மாறக்கூடிய ஒன்று. பழையன கழிந்து புதுமை புகுத்தலே மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிநிலையை காட்டுகிறது. அதனுடன் காலனித்துவ எதிர்ப்பு அரசியலை எவ்வாறு பின்னி பிணைந்து கொண்டு எழுதியுள்ளார் என்பது தான் இந்த நாவலை தட்டையான ஒன்றிலிருந்து பல பரிமாணங்கள் கொண்டுள்ள ஒன்றாக மாற்றியது எனலாம். ஆண்களின் பிறப்புறுப்பு முன்தோலை அகற்றும் பழக்கத்தையும் பெண்களின் க்ளிட்டோரிஸை கீறி விடும் அறுப்பு பழக்கத்தை கொண்ட பழமையான மக்களின் வாழ்வியல் அங்கு வரும் ஆங்கிலேயர்களால் எவ்வாறு

கொமோரா - லஷ்மி சரவணகுமார்

Image
ஆரம்பத்தில் நடந்த களேபரத்திற்கு பாதியிலேயே நிறுத்திவிட்டு இருந்த நாவலைத் தொடர சில அடியாட்களின் சத்தம் அதிகமாக இருப்பதும் அவர்கள் சொல்லுவதே உண்மை என்று பிரகடனம் செய்வதை புரிந்து கொள்ளத்தான். தன்னை நியாயவனாக கருதிக் கொள்ளும் எவரும் அந்த திரைப்படத்தை ( First they killed my father) பார்த்து விட்டு நாவலில் வரும் அந்த கம்போடியா குறிப்புகளை படிக்கலாம். சில அன்புக்கு அடிமை நான். அதனால் அதை அப்படியே விட்டுவிட்டேன். அவரவர் நியாயம் வெளிப்படுவதை பார்த்தவாறே இருக்கிறேன். சரி. எனக்கு தெரிந்த உண்மையை சொல்ல வேண்டுமானால் கம்போடியா குறிப்புகள் எல்லாமே தேவையில்லாத திணிப்புகளாகவே தெரிந்தது. அந்த கதையை ஏன் இங்கு பொருத்திப் பார்க்க வேண்டும் என்றே தெரியவில்லை. ஒரு பிரபலமான நகைச்சுவை டயலாக் போல ‘ அதுக்கும் இதுக்கும் என்னடா சம்மந்தம்? நானா சம்பந்தம் படுத்திக்கிட்ட’ என்பது போலவே தெரிந்தது எனக்கு. அதைப் படிக்கும் போது ஒரு கட்டத்தில் மொழி கூட மெரினா போராட்டத்தின் போது வந்த வாட்சப் மேசஜ்களை போல பிரச்சாரத் தொணியை நினைவுப்படுத்தியது. சத்யா பற்றி இந்த நாவலுக்கு முன்னாடியே அவர் அடிக்கடி எழுதுவ

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

Image
" பேர்யாழ் " என்ற கவிதைத் தொகுப்பு குளிர் காலத்தில்​ கனன்று கொண்டிருக்கும் தாயின் மார்பினில்  உறங்கும் பச்சிளங்குழந்தை போல ஒரு கதகதப்பை தந்தது. இது குளிர் காலத்தில் படிக்கும் ஒவ்வொருவருக்கும் உண்டான உவமை மட்டுமல்ல. தேவதேவன் கவிதைகள் என்னை குழந்தை போல கள்ளமற்ற மகிழ்ச்சி அடைய செய்தது. தேவதேவன் கவிதைகளை சாதாரணமான செடி, கொடி, மரங்கள் பற்றிய அழகியல் கவிதை என்று சுருக்கி விட முடியாது. புத்தன்/ லாவேட்சு/ ஓஷோ கவிதை எழுதியது போல ஒவ்வொரு கவிதையிலும் அதன் ஞானச்சிதறல்கள் பட்டுத் தெறித்து உன்மத்தம் அடைகிறது. ஒவ்வொரு கவிதையும் பேரானந்தம். தமிழில் ஜென் கவிதைகள் ஒன்று உண்டெனில் அதில் இந்த தொகுப்பிற்கு முக்கியமான பங்கு வகிக்கும் என நம்புகிறேன்.  புரட்சி என்பது அகவயமானது என நம்புகிறேன். செயலின் ஊற்றுக்கண்ணான சிந்தனையை பாதிப்பதே எழுத்தின் முக்கியமான தொழிலாக நம்புகிறேன். இங்கு புரட்சியை புறவயமானது என்று பலர் நினைக்கக்கூடும். அது பகுத்தறிவோடு நின்று விடும். அதற்கு மேல் பயணிக்க வேண்டும் என்றால் நாம் உட்புறமாக திரும்பிச் செல்ல வேண்டும். தேவதேவன் கவிதைகள் அனைத்தும் அவரது இதயத்திலிருந்து பு

மீசையில் கறுப்பெழுதும் தினங்களின் காஸ்மிக் நடனம் - எம்.கே.மணி

Image
இலக்கியம் என்பது வாழ்க்கை பற்றிய அவதானிப்புகளாலும் மொழியை கையாளும் விதத்தாலும் மட்டுமே இலக்கியமாகிறது. வாழ்க்கையைச் சொல்லுங்கள். அதன் நுட்பங்களை. அதன் மீதான உங்கள் சொந்த அவதானிப்புகளை. உங்கள் மனதை ஆதாரமாக்கி வாழ்க்கையை விவரியுங்கள். இலக்கியம் எப்படி எப்படி வளர்ந்தாலும் கடைசியில் மானுட மனதைச் சிறப்பாகச் சொல்வதே இலக்கியம் என்ற விதியே எஞ்சி நிற்கிறது என ஜெயமோகன் ஒரு முறை எழுதியது நினைவுக்கு வருகிறது. மணி ஸாரின் ஒவ்வொரு கதையிலும் வரும் கதாபாத்திரங்கள் இந்த உலகம் அழியும் தருவாயிலும் தொடர்ந்து உழன்று கொண்டிருக்கும் உயிரும் சதையுமான கதாபாத்திரங்கள். ஆண் எப்படிப்பட்டவன் அவனது கண நேர உணர்ச்சிகளை கூட எந்தவித ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லியிருக்கிறார். “வர வர நீ ஏன்மணி ஸார் மாதிரி எழுதற. ஏன் எப்ப பாத்தாலும் அவரையே தூக்கி வெச்சி பேசர. யாரு இந்த மணி ஸார்? ஒருவேளை சர்காஸமா? கிண்டல் பண்றியா ?.”  ங்கோத்தா மணி ஸாருக்கு சொம்பு தூக்கறியானு மட்டும் தான் யாரும் ஓப்பனாக கேட்கவில்லை. ஒருவரை பாராட்டி பேசுவது கூட இப்படியான நிலைமைக்குத் தான் கொண்டுபோகும் என்று நினைக்கிறேன். அதனாலயே புத்தகம் வெளியீடு ம

பச்சை நரம்பு - அனோஜன் பாலகிருஷ்ணன்

Image
“எழுத்தாளனின் முதிர்ச்சி என்பது  வயதை சார்ந்தது அல்ல. அது வயதை தாண்டிய மனதின் முதிர்ச்சியை சார்ந்தது” என்று விமலாதித்த மாமல்லன் கி.ரா.பற்றி சொன்னது அப்படியே அனோஜனுக்கும் பொருந்தும். இந்த வயதில் அனோஜனின் மொழியும் பக்குவமும் பிரமிக்கத்தக்கது. அநேகமாக ஒத்த வயதுடைய எங்களை போன்றவர்களுக்கு அது பொறாமையாகதான் இருக்கும். அனோஜன் தனது காத்திரமான விமர்சனங்களை ஒதுக்கி வைத்துவிட்டு படைப்புகளில் கவனம் செலுத்த வேண்டும். விமர்சனங்கள் வைப்பவர்கள் அவ்வளவு காத்திரமாக படைப்புகளை எழுதுவதில்லை என்று அனோஜன் பற்றி யாரோயொருவர், ஒரு முறை எழுதியிருந்தது நியாபகம். அந்த லாஜிக்கில் எனக்குமே குழப்பம் இருப்பதால் அது பொய்யாக வேண்டும் என்று நினைக்கிறேன். ஏனெனில் அனோஜனின் விமர்சனங்கள் மிக மிக முக்கியமான ஒன்றாகப் படுகிறது எனக்கு. அதை செம்மத்தியாகவே செய்தும் வருகிறார். அதற்கு அவரது வலைத்தளமே (www.annogenonline.com) சாட்சி. விமர்சனம் என்ற போர்வையில் ஆரம்பித்ததிலிருந்து இறுதிவரை கதையை சொல்வதில் எனக்கு உடன்பாடில்லை. (அது சினிமா ஆனாலும் சரி). வாசகர்களே அதை கன்னி மனதுடன் படித்து அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன

‘இனி வேண்டியதில்லை’ சிறுகதையும் ‘ஆர்டிஸ்ட்’ எனும் மலையாள படமும் :

Image
ஒருமுறை அசோகமித்திரனிடம் கேட்ட கேள்வி : உங்கள் கதைகளிலே எதில் பெண்ணை பற்றி சிறப்பாக எழுதியுள்ளதாக நினைக்கிறீர்கள் ? பதில் - இனி வேண்டியதில்லை என்ற சிறுகதை. பிறகு லைப்ரரியில் தேடி இந்த சிறுகதையை வாசித்தேன். எப்படி இந்த கதையை பற்றி யாரும் இதுவரை எழுதவே இல்லை என்று நொந்துக்கொண்டேன். மிக அருமையான கதை. வழக்கமான அசோகமித்திரன் ஸ்டைல் இதிலும் இருக்கிறது. ஒரு கதையுனூடகவே நிகழும் நிகழ்வுகளை சொல்லும் போது பிறிதொன்று மேலெழும்பி நிற்கும் கதை தான். இதில் பெண்ணின் ஆதியியல்பை பற்றி நறுக்கு தெரித்த மாதிரி விளக்குகிறார். பனிக்குடம் போல பெண்ணின் நம்பிக்கைகள் உடையும் புள்ளியை கொண்டு வந்து சேர்க்கும் விதம் அற்புதம். பெண் என்பவளின் பொறுமை எவ்வளவு ஆழமானது என்பதையும் அதன் உச்சத்தில் ஒரு breaking point வரும் என்பதையும் எந்தவித பிசிறும்  இல்லாமல் தெளிந்த நீரோடையாக எழுதியுள்ளார். வாழ்க்கையை எவ்வளவு நுட்பமாக அதிலும் ஆண் பெண் உறவுகளை எவ்வளவு நுட்பமாக கவனித்திருந்தால் இதை எழுத முடிந்திருக்கும். அசோகமித்திரனின் இந்த கதையை சுருக்கமாக சொல்ல முயற்சிக்கிறேன். கதாபாத்திரங்களின் பெயர்கள் நினைவில்லை. ஆண

சவரக்கத்தியும் அபத்த வாழ்கையும் :

Image
ஒரேயொரு பிரார்த்தனைதான் குச்சியைக் காட்டியதும் குழையும் மிருகமென இவன் முன் நான் நிற்பதை என் குழந்தைகள் ஒருபோதும் பார்க்கக்கூடாது. "அப்போ நீ ராஜா இல்லியாப்பா?" என்றவர்கள் ஒருபோதும் என்னைக் கேட்டிடக்கூடாது. - போகன் ஷங்கர் ( தடித்த கண்ணாடி போட்ட பூனை தொகுப்பிலிருந்து ). எனக்கு இந்த வரிகளில் கிடைத்த அபத்தமான வாழ்க்கையை பற்றிய உணர்வை அப்பட்டமாகவே சவரக்கத்தி படத்தில் ஒரு புள்ளியில் பார்த்து லேசாக கண் கலங்கிவிட்டேன். முதல் ஐந்து நிமிடம் சிரமமாகவே இருந்தது படத்தினுள் நுழைய. ஆனால் அந்த டிராபிக் சிக்னல் காட்சிகளுக்கு பிறகு படத்தில் மூழ்கி விட்டேன். ஒரு முறை மணி ஸார் சொன்னது நியாபகம் வந்தது. அது - “ உண்மை ஜெயிப்பதெல்லாம் கிடையாது; மெஜாரிட்டி ஜெயிக்கும் அல்லது பலம் இருப்பவன் ஜெயிப்பான்” அந்த காட்சியில் இதுதான் நடக்கும். படம் முழுவதுமே அபத்தமான வாழ்வைப் பற்றிய நகைச்சுவைகள் நிறைந்திருந்தன. எளிய மக்களிடம் நெஞ்சை நிமிர்த்தும் காவல்துறையினர் உயரதிகாரிகளிடம் காலில் விழாத குறைதான். பொதுவாகவே மிஷ்கின் படங்களில் வாழ்க்கை பற்றிய அபத்தம் பற்றிய காட்சிகள் இருக்கவே செய்யும். சவரக்கத்த

முறைப் பெண் - அசோகமித்திரன்

Image
அசோகமித்திரனின் பறவை வேட்டை எனும் சிறுகதை தொகுப்பில் இருந்த  ஒரு சிறுகதை 'முறைப்பெண்’. ஏதோ ஒரு பக்ஷனுக்காக அக்கா வீட்டீற்கு போகும் அசோகமித்திரன் அவர்பால் அன்பு கொண்ட இலக்கிய நண்பர்கள் ஒரு வேளை சாப்பாடு தம்மோடு சாப்பிட வேண்டும் என்று அன்புக்கே உரிய உரிமையுடன் சொல்லுவார்கள். அந்த வேளை அக்கா வீட்டிலும், அந்த நண்பர் வீட்டிலுமாக சாப்பிட வேண்டிய கட்டாயம். சூழ்நிலை காரணமாக  எல்லோரிடமும் சாப்பிட்டு கடைசியில் அக்கா வீட்டு பக்ஷனில் வாந்தி எடுத்து படுத்த படுக்கையில் வீழ்வார். அவரது அக்கா மகளை அவருக்கு கல்யாணம் செய்யலாம் என்றிருந்த யோசனையும் போய்விடும். இதை அவருக்கே உரிய நகைச்சுவையுடன் எழுதியிருக்கிறார். மேலோட்டமாக பார்த்தால் இதெல்லாம் ஒரு கதையா என்று தான் தோன்றும். ஓவராக சாப்பிட்டால் உடல் உபாதை வருவது எல்லாம் ஒரு பெரிய கதை ஆகிவிடுமா என்று தோன்றலாம். கதையின் மையச்சரடே சாப்பாட்டை சாப்பிடுவதோ அக்கா மகளை பற்றியோ அல்ல. அன்பின் பெயரால் நடக்கும் அராஜகம் பற்றிய கதைதான் இது. அன்பினால் ஒருவரை ஒடுக்கவும் அடக்கி ஆளவும் செய்வது பாசிசம். அவர் சாப்பாடு வேண்டாம் என்று சொன்னால் அக்கா கோபித்துக் க

அவர்கள் குழந்தைகள் அல்ல

Image
Pc- பேசும் புதிய சக்தி இதழ் இந்த நூற்றாண்டின் குழந்தைகள் சீக்கிரமே பேச கற்றுக் கொள்கிறார்கள் நடக்கவும் ஆன்ட்ராய்டு போனில் விளையாடவும் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கவும் செய்கிறார்கள் பெரியவர்கள் போல காதலிக்கவும் சீக்கிரமே பிரிந்து விடவும் செய்கிறார்கள் அதற்காக முதலில் வருந்தவும் பின்னர் சிரிக்கவும் செய்கிறார்கள். உடல்களை அடையாளம் காண்பதிலும் அனுபவிப்பதையும் புகைப்பதையும் குடிப்பதையும் கூட சீக்கிரமே வெறுத்துமிடுகிறார்கள். கடவுளை கேள்விக்கேட்க கூட அவர்கள் தயங்குவதில்லை அவர்களிடம், " மலை உச்சியில் தனித்து விடப்பட்ட ஒரு சிறு புல்தான் கடவுள் இது தெரியுமா!" என்று கேட்டுப் பாருங்கள் உங்களிடம் மனநல மருத்துவமனைக்கு வழி எந்தப் பக்கம் என்று சரியாக காட்டுவார்கள் தேவைப்பட்டால் உங்களை கையோடு மனநல காப்பகத்தில் சேர்த்தும் விடுமளவுக்கு அவர்கள் புத்திசாலிகள் தான். அவர்கள் குழந்தைகள் அல்ல வளர்ந்தவர்களை விட வளர்ந்தவர்கள். இந்த சிறிய பாதையின் வளைவுகளின் விளிம்பிற்கு வெகு சீக்கிரத்திலே வந்து சேர்ந்து விடும் இந்நூற்றாண்டு இளம் பயணிகள் தங்கள் தனிமையை தீர்த்துக்கொள்வதற்காக எல