Posts

Showing posts from May, 2018

கலையும் கொலையும் அதனுடன் பா.ரஞ்சித் எனும் கலைஞனும் :

Image
கிரிக்கெட் விளையாடும் போது எப்படியோ புதிய ஷார்ட்ஸ் ஒன்றின் அடியில் லேசாக தையல் பிரிந்திருந்தது. டெய்லரிடம் சென்றால் பத்து ரூபாயில் முடிந்து விடும். ஆனால் சோம்பேறித்தனம். அதற்கு பதிலாக நானே ஊசி நூலைக் கொண்டு தைக்க முடிவெடுத்தேன். ஊசி நூலைத் தொட்டதெல்லாம் பால்யத்தில் தான். இப்போது உபயோகிக்கும் போது பழைய நினைவுகள் வந்தது. போகட்டும். கூடவே ஒரு கொரியன் படமும் நியாபகம் வந்தது. The way home.  அதில் கடைசியாக அந்த சிறுவன் தனது பாட்டிக்காக நிறைய ஊசி-நூலைக் கோர்த்து விட்டு போவான். அந்த காட்சி இன்றளவும் என்னை உலுக்கக்கூடியது. ஒரு ஃபிரேமில் அன்பின் ஆழத்தை காட்ட முடியும் என்பதெல்லாம் சாத்தியம். இந்த படத்தில் எந்த வித ரொமான்டிஸமும் இல்லை என்பது தான் தனிச்சிறப்பு. அவ்வளவு சீக்கிரத்தில் அழமாட்டேன். ஆனால் இந்த காட்சி நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்கு கண்ணீரை கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடுகிறது. இதன் திரைக்கதையை மட்டுமல்ல அந்த நடிகர்களையும்  பாராட்டாமல் இருக்க முடியாது. பெரிய பெரிய தத்துவத்தை விட  எளிதான  ஒன்றை வெளிக்கொணர்வது தானே சிரமம். அதில் தானே கலை ஒளிந்துகொண்டு விளையாடுகிறது. கலை எ

Revelation எனும் ஒலக சினிமா :

Image
இது தான் தமிழின் தலைசிறந்த படமென்று ஓவராக ஒருபுறம் புரட்சிகர கொடியினை தூக்கிய போது பார்த்து வெக்ஸ் ஆகிவிட்டேன். என்னைத் தவிர எல்லோரும் கொண்டாட்ட கொடியை தூக்கினர். கும்பல் பலத்துடன் போட்டிப் போட முடியுமா? கலைஞன் எப்போதும் கும்பலுடன் இருக்கமாட்டான் என விமலாதித்த மாமல்லன் எழுதியது நினைவுக்கு வந்தது. பின்னர்  நேற்று ஒரு தரம் பார்த்தேன். Revelation என்றால் வெளிப்பாடு. கலையின் முக்கியமான சிறப்பே வெளிப்பாடு தான். படத்தில் வரும் முக்கியமான திருப்பங்கள்/ வெளிப்பாடுகள் திரைக்கதையில் மிகவும் செயற்கையாக இருந்தது உறுத்தியது. அதாவது ஒரு ஆண் தானொரு Impotent ( ஆண்மை அற்றவன்) என்பதை அவ்வளவு எளிதாக சொல்லி விடமாட்டான். ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஆரம்ப காட்சியே மிரள வைக்கும். ஐயா எனும் கதாபாத்திரம் செய்வது தான் ஒரு ஆணின் ஆதியிலப்பு. வயதான ஒருவனே அப்படி என்றால் இளம் வயதுடையவன் எப்படி ஒத்துக் கொள்வான். அந்த காட்சி தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட்டிலே இருந்தது. போலித் தனம் என்பது இதுதான். அப்புறம் சேத்தனை பார்த்தால் கிழவன் மாதிரி தெரிகிறது. தனது அம்மாவையே சொந்தமாக தூக்கி கட்டிலில் படுக்க வைக்க முடியா

வைகாசி -2 :

Image
வேலூர் மாவட்டத்திலே குடியாத்தம் கங்கையம்மன் திருவிழா என்றால் பிரசித்தம். அல்லது பிரசித்தமாக நாங்களே கூட நினைத்துக் கொள்ளலாம். எங்களை சுற்றி உள்ள ஊர்களிலே இங்கு தான் மிகப்பெரிய திருவிழா நடைபெறும். இது நடப்பது ஒவ்வொரு வருடமும் வைகாசி ஒன்றாம் தேதி. மே மாதத்தில் வரும். பெரும்பாலும் திருவிழா நடத்தும் ஊர்கள் ஆங்கில தேதிகளை உபயோகிப்பது இல்லை. திருவிழாவிற்கு மட்டும் தமிழ் தேதி. மற்ற உலகியல் சார்ந்த எல்லா விஷயங்களிலும் ஆங்கில தேதி தான். வைகாசி இரண்டாம் நாள் என்பதால் Convenient காக எனது அம்மா ஒவ்வொரு வருடமும் குடியாத்தம் திருவிழா அடுத்து எனது பிறந்த நாளை நினைவு வைத்துக் கொள்வது வழக்கம். பின்பு அதுவே வழக்கமாகியது. லீப் வருடம் வருவதால் ஆங்கில தேதியை பயன்படுத்துவது இல்லை. ஒவ்வொரு வருடமும் பிறந்த நாளைக்கு முன்பாகவோ அல்லது அடுத்த நாளைக்கோ வாழ்த்துகள் சொல்லும் சில நண்பர்கள் இருக்கிறார்கள். ஆரம்பத்தில் நானும் ஒவ்வொரு முறையும் விளக்கம் சொல்லி வந்தேன். பின்னர் யார் எப்போது வாழ்த்து சொன்னாலும் நன்றி என்று சொல்லி வைத்து விடுவேன். இதுபோன்ற அற்ப காரணங்களால் யாரும் எனக்கு வாழ்த்து சொல்வதில்லை. ஏ

கடவுள் துகள்

Image
குழந்தைகள் கோவத்தில் தூக்கி எறிந்த பொருட்களை பத்திரமாக கவ்விக் கொண்டு வந்து சேர்க்கும் அந்த வீட்டுக் குட்டிநாயின் கள்ளமற்ற அன்பை போல தவறாமல் இப்பொழுதும் மெழுகுவர்த்திகளை ‘மட்டும்’ கொண்டு வரும் தொலைதூரத்து உறவான வேறு உறவுகளே இல்லாத பெரியம்மாவின் வருகையை அந்த நகரமும் அந்த வீட்டாரும் பொருட்படுத்துவதே இல்லையென தெரிந்தும் புறக்கணிப்புகளை மீறிய அன்பை செலுத்தும் இந்த ‘பிரபஞ்சத்தின் கடவுள்துகளாக’ அவள் வந்துக்கொண்டே இருக்கிறாள் .

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

Image
    “ தன்னைத் தானே அவதானிக்கும்       விழிப்பு நிலை தான் ஆத்மார்த்தத்தின்       முதலும் முடிவுமான செயல் வழி”.               ~ ஜே.கிருஷ்ணமூர்த்தி எனக்கு எதிர் வீட்டில் ஐந்து குழந்தைகள். அவர்கள் பெற்றோர் காலையில் 8மணிக்கு வேலைக்கு சென்று மாலை 6 மணிக்குதான் வருவது வழக்கம். சிலர் பள்ளி செல்லும் சிறுவர்கள். சிலர் பால்வாடி செல்லும் சிறுமிகள். ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு மணி நேரம் வெறுமனே இவர்களை அவதானிப்பது மட்டுமே எனது வேலை. ஒரு ரூபாய்க்கு பிரயோஜனம் அற்ற வேலையல்லவா. இந்த அவதானிப்பு சில ஆண்டுகள் என்பது எனக்கே அதிர்ச்சி தரும் செயல்பாடு தான். இருந்தும் இப்போதும் அவர்களை அவதானிக்க அவர்களிடம் இருந்து பெற்றுக் கொள்ள ஏராளமாக இருப்பதாக தோன்றுகிறது. என்னடா இவன் குழந்தைகளை ரொமான்டிசைஸ் செய்கிறானே என்றெல்லாம் சொல்லி விடாதீர்கள். நான் புதுமைப்பித்தனின் “அடச்சீ இந்த சனியன்களே..”இந்த கவிதை போலத்தான் பழகுவேன். பொதுவாகவே இது எதிர் அழகியல் முயற்சி. ஒரு அதட்டலுடனே குழந்தைகளுடன் பழகுவேன். அவர்களின் முகபாவனைகளில் இருந்து மொழி வரைக்கும் கவனிப்பதே என் பிரதானமான தொழிலாக இருக்கிறது. ஜெயமோ