Revelation எனும் ஒலக சினிமா :




இது தான் தமிழின் தலைசிறந்த படமென்று ஓவராக ஒருபுறம் புரட்சிகர கொடியினை தூக்கிய போது பார்த்து வெக்ஸ் ஆகிவிட்டேன். என்னைத் தவிர எல்லோரும் கொண்டாட்ட கொடியை தூக்கினர். கும்பல் பலத்துடன் போட்டிப் போட முடியுமா? கலைஞன் எப்போதும் கும்பலுடன் இருக்கமாட்டான் என விமலாதித்த மாமல்லன் எழுதியது நினைவுக்கு வந்தது. பின்னர்  நேற்று ஒரு தரம் பார்த்தேன். Revelation என்றால் வெளிப்பாடு. கலையின் முக்கியமான சிறப்பே வெளிப்பாடு தான். படத்தில் வரும் முக்கியமான திருப்பங்கள்/ வெளிப்பாடுகள் திரைக்கதையில் மிகவும் செயற்கையாக இருந்தது உறுத்தியது. அதாவது ஒரு ஆண் தானொரு Impotent ( ஆண்மை அற்றவன்) என்பதை அவ்வளவு எளிதாக சொல்லி விடமாட்டான். ஆரண்ய காண்டம் படத்தில் வரும் ஆரம்ப காட்சியே மிரள வைக்கும். ஐயா எனும் கதாபாத்திரம் செய்வது தான் ஒரு ஆணின் ஆதியிலப்பு. வயதான ஒருவனே அப்படி என்றால் இளம் வயதுடையவன் எப்படி ஒத்துக் கொள்வான். அந்த காட்சி தமிழ் சினிமாவின் டெம்ப்ளேட்டிலே இருந்தது. போலித் தனம் என்பது இதுதான்.

அப்புறம் சேத்தனை பார்த்தால் கிழவன் மாதிரி தெரிகிறது. தனது அம்மாவையே சொந்தமாக தூக்கி கட்டிலில் படுக்க வைக்க முடியாத வாலிபன் (வாலிபன் தானா?). அந்த வாலிபனை பார்த்ததும் காதல் ஏற்படுவது எல்லாம் வழக்கமான தமிழ் சினிமா கதை தான். யாரையும் காதலிக்காமல், வயதானா ஹீரோவுக்காக காத்திருக்கும் ஹீரோயின். இதைத்தானே ரஜினி விஜய் அஜித்து எல்லாம் எடுக்கிறார்கள்.  இப்படி படம் நெடுகிலும் மெலோடிராமா எனும் மிளகாய் தூள் தூக்கலாக இருக்கிறது. அதுவும் அந்த முத்தம் தரும் சூழ்நிலையை உருவாக்கி விட்டு தூய்மையான காட்சியாக வருமே அதெல்லாம் சுத்த ஹம்பங். அவன் கொலை செய்யும் கனநேரம் எப்படி உண்மையோ அப்படி அந்த நேரம் உண்மை அல்ல. முழுக்க முழுக்க செயற்கைத் தனம். கதை எழுதும் போது அந்தந்த கதாபாத்திர வார்ப்புருக்கள் அதுவாகவே இருக்க விட வேண்டும். அல்லாது போனால் இப்படித்தான் குத்துயுரும் கொலை உயுருமாக இருக்கும்.

இங்கேயே தமிழின் தலைசிறந்த படத்துக்கு முதல் சருக்கல். அதை இயக்குநரே கூட ஒத்துக்கொண்டு இருக்கிறார். அந்த வீடியோ லிங்க். https://youtu.be/u2Hp2d8VWIA.  அதனால் படைவீரர்கள் வெட்டருவா வேல்கம்புகளை எடுக்க வேண்டியதில்லை. 

பிறகு, திரைமொழி  என்றும் குறியீடு என்றும் பேஸ்புக்கில் மிக அதிகமாக வன்புணர்வு செய்யப்பட்ட வார்த்தைகளை படம் நெடுகிலும் அள்ளித் தெளித்த உலக சினிமா விமர்சகர்களின் கட்டுரைகள் மிகுந்த சலிப்பையே தந்தது. உதாரணமாக ஒரு கட்டுரையில் - ஒரு ஆண் கதாபாத்திரம் பெண் கதாபாத்திரத்தை காரின் கண்ணாடியில் சைட்டடிப்பது ( சாதாரணமாக பார்ப்பதையே) அந்த ஆண் கதாபாத்திரத்தின் அம்மாவும் அதே கண்ணாடியை பார்த்தே புரிந்து கொள்வார். அவ்வளவு தான். இதையெல்லாம் உலகத்திலே இல்லாத திரைமொழி என்று விமர்சன கட்டுரை எழுதும் உலக சினிமா ரசிகர்களுக்கு ஒரு தகவல்.


https://youtu.be/GeWdQfiNgzQ இவன் வேறமாதிரி படத்தின் ஒரு பாடலில் ஹூரோயின் ஹூரோவை நினைத்து ஆட்டோ டிரைவருக்கு முத்தம் கொடுப்பாள். அவனும் அவ்வாறே சைகை செய்வான். இதை ஹீரோயின் அம்மா கண்ணாடியில் பார்த்து கண்டிப்பார். மேலே உள்ள காட்சிக்கும் இதற்கும் என்ன வித்தியாசம் இருந்து விடப் போகிறது. இதையெல்லாம் திரைமொழி என்பதை விட கேவலமான ஒன்றில்லை. அதற்காக நான் அப்போதே உருவாக்கிய மீம்.



காட்சி படிமம் என்ற ஒரு வார்த்தை வசீகரமானது. இந்த படத்தில் கதாபாத்திரங்கள் மனச்சிறையில் இருப்பதால் ஜன்னல் கம்பிகள் போன்ற ஒரு மறைப்பு வழியாக பெரும்பாலும் ஷாட்கள் அமைத்திருப்பது சூப்பர். ஆனால் இதை ஆரண்ய காண்டம் படத்திலேயே தலைவன் தியாகராஜன் குமாரராஜா செய்து விட்டார். அதில் வரும் ஒவ்வொரு பிரேமும் மனதில் அப்படியே இருக்கிறது. அதாவது ஆ.கா. படத்தில் கொடுக்காபுளியும் அவனது அப்பாவும் அந்த போன் நம்பர் சீட்டை மறந்து விடுவார்கள். அதை எடுக்க போகும் காட்சிகள் என்று வருபவை எல்லாம் ஒரு மறைப்புக்கு பிறகே காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். அதைப்பற்றி ஒரு கலந்துரையாடலில் குமாரராஜாவிடம் கேட்டபோது, “ சும்மா ஒரு பேரியர் பின்னாடி இருந்து எடுத்தா நல்லா இருக்கும்னு எடுத்தது” என்று முடித்து விட்டார். அதற்கான ஆதாரம். 
https://youtu.be/nZTSUQiPFIo.  திரைமொழி, காட்சிப் படிமம் என்று எந்த பந்தாவும் செய்யவில்லை. ஆக முதன் முதலில் இந்த காட்சி படிமம் இருந்த ஒரே தமிழ்படம் இதுதான் என்ற டேக்லைனும் புயலில் போச்சி.இருந்த ஒரு யுக்தியும் சுட்டது. புதியதாக எதுவுமே இல்லை.  
உண்மையில் சொல்லப்போனால் சவுண்ட் டிசைன் அவ்வளவாக கவரவில்லை. லைவ் ரெக்காடிங் என்கிறார்கள். மந்தமாகவே சவுண்ட் டிசைன் இருந்தது. டாக்குமெண்டரி எடுக்க போகும் இடங்கள். Gaandu என்ற கொல்கத்தா படத்தில் Rock இசையை சிறப்பாக இணைத்திருப்பர். 

ஒரு பட போஸ்டரில் பூ போட்டு விட்டால் போதும் அது ஒலக சினிமா ஆகிவிடுகிறது. பூ என்ற லேபிள் இருந்தால் போதும். அது தலைசிறந்த படம். அது உண்மையில் சிறந்ததா இல்லையா என தன் உள்ளத் தேடலை தொடராத ஒருவன் ரஜினியின் ஆன்மீகத்தை நொட்டை சொல்ல மட்டுமே லாயக்கி. இதெல்லாம் ஒரு தகுதியா. பூ போடாத படத்தில் கூட தெரிந்து கொள்ள ஆயிரம் இருக்கிறது என்பது உலக சினிமா கோஷ்டியினருக்கு புரியப் போவதில்லை. அவர்கள் புரிந்துகொள்ள விழைவதும் இல்லை. 

தமிழில் வரும் குப்பை கமர்ஷியல் படங்களுக்கு மத்தியில் இது போன்ற படம் பரவாயில்லை. அதற்காக வெறுமனே கொண்டாட்ட கொடியை தூக்கிப் பிடிப்பது சரியான பாதையும் அல்ல. தனது சொந்த தயாரிப்பில் இயக்கிய இயக்குனர் பாராட்டியே ஆக வேண்டும். சேத்தன், பிரியா என எல்லா நடிகர்களும் நடிகைகளும் பாராட்டலாம். குறைகளையே அதிகமாக சொன்னதால் அநேகமாக எனக்கும் இந்த இயக்குநருக்கு ஊரில் வாய்க்கால் தகராறு இருக்கும் என்று வதந்தி பரவினாலும் பரவலாம்.

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :