Posts

Showing posts with the label fiction

அகாலம்

Image
இழவு வீட்டின் பிராதன ஊதுபத்தி வாசனை அந்த இடத்தை ஆக்கிரமித்து நெடுநேரமாகிறது. அதை அணையவிடாமல் மேலும் மேலும் எரியவைக்க ஒரு கூலியில்லா ஆளும் நியமிக்கப்பட்டிருந்தார். அழுது அழுது தொண்டை வற்றிப்போயி கோமதியம்மாள் நடையின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கிறாள். சில ஆட்களும் அதே கலைப்பில் அமைதியாக இருந்தனர். அந்த அமைதி சற்று பயங்கரமாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் தூரமாக ஒரு திண்ணையின் ஓரத்தில் இருந்தோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த கோமதியம்மாளின் கணவர் ராமையாவுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்து அந்த கணத்தை குழைத்தது. அழைப்பை எடுத்ததும் ," ரே மாப்ள பின்னிகா ஃப்ளைட் எக்கி ராரா. சந்தோஷூ பாய்ல படி சச்சிபோயினாடுரா...." என்று தங்கள் மேல் குற்றமில்லை என்பதை அழுதுக்கொண்டே நிரூபிக்க போராடினார். மறுமுனையில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. அழைப்பை துண்டித்ததும் அவர் " ஞேனு ஏன்டிக்கு ஏடித்துதனே தெல்லேதுரா ஞைனா..." என்று எனது தோலை பிடித்தார்.  அழுது ஓய்ந்திருந்த கூட்டம் புத்துயிர்ப்பு அடைந்தது.  கோமதியம்மாளே ஆரம்பித்தாள். " ஐயோ... மா அல்லுடு ஒச்சி அடுக்குதுடே ஞேனு ஏமி செப்பேதி.. நா தெகிர உந்...

கடவுள் துகள்

Image
குழந்தைகள் கோவத்தில் தூக்கி எறிந்த பொருட்களை பத்திரமாக கவ்விக் கொண்டு வந்து சேர்க்கும் அந்த வீட்டுக் குட்டிநாயின் கள்ளமற்ற அன்பை போல தவறாமல் இப்பொழுதும் மெழுகுவர்த்திகளை ‘மட்டும்’ கொண்டு வரும் தொலைதூரத்து உறவான வேறு உறவுகளே இல்லாத பெரியம்மாவின் வருகையை அந்த நகரமும் அந்த வீட்டாரும் பொருட்படுத்துவதே இல்லையென தெரிந்தும் புறக்கணிப்புகளை மீறிய அன்பை செலுத்தும் இந்த ‘பிரபஞ்சத்தின் கடவுள்துகளாக’ அவள் வந்துக்கொண்டே இருக்கிறாள் .

லேபிள் உலகம்

Image
Courtesy: pisasu film. அழகான குரலுடய சிறுமிகள் பெரும் புகழடைய மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தகுதிகளில் முதன்மையானதும் அதி முக்கியமானதும் ஒன்றுண்டு அது அந்தச் சிறுமியின் விழியில் ஒளியில்லாததால் உண்டான "குருடி" எனும் லேபிளை. இரண்டாவது லேபிள் ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும் மூன்றாவது லேபிள் அவளது உடல் வனப்பாக இருக்கலாம் இறுதியாக தான் அவளது ஆதார ஸ்ருதியான 'குரல்'வளமெனும் லேபிள். இந்த கவிதையில் கூட சிறுமி என்ற லேபிள் தான் பலசாலி சிறுவன் வந்திருந்தால் நோஞ்சானாயிருக்கும்.

அவர்கள் குழந்தைகள் அல்ல

Image
Pc- பேசும் புதிய சக்தி இதழ் இந்த நூற்றாண்டின் குழந்தைகள் சீக்கிரமே பேச கற்றுக் கொள்கிறார்கள் நடக்கவும் ஆன்ட்ராய்டு போனில் விளையாடவும் சமூக வலைத்தளங்களில் தனக்கென ஒரு கணக்கை உருவாக்கவும் செய்கிறார்கள் பெரியவர்கள் போல காதலிக்கவும் சீக்கிரமே பிரிந்து விடவும் செய்கிறார்கள் அதற்காக முதலில் வருந்தவும் பின்னர் சிரிக்கவும் செய்கிறார்கள். உடல்களை அடையாளம் காண்பதிலும் அனுபவிப்பதையும் புகைப்பதையும் குடிப்பதையும் கூட சீக்கிரமே வெறுத்துமிடுகிறார்கள். கடவுளை கேள்விக்கேட்க கூட அவர்கள் தயங்குவதில்லை அவர்களிடம், " மலை உச்சியில் தனித்து விடப்பட்ட ஒரு சிறு புல்தான் கடவுள் இது தெரியுமா!" என்று கேட்டுப் பாருங்கள் உங்களிடம் மனநல மருத்துவமனைக்கு வழி எந்தப் பக்கம் என்று சரியாக காட்டுவார்கள் தேவைப்பட்டால் உங்களை கையோடு மனநல காப்பகத்தில் சேர்த்தும் விடுமளவுக்கு அவர்கள் புத்திசாலிகள் தான். அவர்கள் குழந்தைகள் அல்ல வளர்ந்தவர்களை விட வளர்ந்தவர்கள். இந்த சிறிய பாதையின் வளைவுகளின் விளிம்பிற்கு வெகு சீக்கிரத்திலே வந்து சேர்ந்து விடும் இந்நூற்றாண்டு இளம் பயணிகள் தங்கள் தனிமையை தீர்த்துக்கொள்வதற்காக எல...