லேபிள் உலகம்

Courtesy: pisasu film.



அழகான குரலுடய சிறுமிகள்
பெரும் புகழடைய
மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தகுதிகளில்
முதன்மையானதும்
அதி முக்கியமானதும் ஒன்றுண்டு
அது
அந்தச் சிறுமியின் விழியில் ஒளியில்லாததால் உண்டான
"குருடி" எனும் லேபிளை.

இரண்டாவது லேபிள்
ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும்
மூன்றாவது லேபிள்
அவளது உடல் வனப்பாக இருக்கலாம்
இறுதியாக தான்
அவளது ஆதார ஸ்ருதியான
'குரல்'வளமெனும் லேபிள்.

இந்த கவிதையில் கூட
சிறுமி என்ற லேபிள் தான் பலசாலி
சிறுவன் வந்திருந்தால் நோஞ்சானாயிருக்கும்.

Comments

  1. உண்மை. அதிலும் தொலைக்காட்சிகளில் அந்தச் சிறுமி வலம் வந்தாளானால் அது அவள் பிரபலமாவதற்கு அன்று; அவள் மூலம் அத்தொலைக்காட்சி பிரபலமாவதற்கே !

    ReplyDelete
    Replies
    1. இது தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை பார்த்துக் கொண்டு இருக்கும்போது தோன்றியது தான். You point out exactly.

      Delete

Post a Comment

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?