Posts

Showing posts from July, 2018

இலக்கியத்திலிருந்து சினிமா :

Image
தலைப்பே சுவாரஸ்யமான ஒன்று. இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அன்பும் நன்றியும். இதைப்பற்றி திரைக்கதை எழுத்தாளர் எம் கே மணி அவர்கள் பேசிய வீடியோ முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன்.  அதைப்பற்றி சில வார்த்தைகள். பேச்சை ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி என சொல்லுவார்களே அது தெரிந்தது. இலக்கியத்தில் இருந்து சினிமா வந்தது சரியா தவறா? இலக்கியத்தில் இருந்து சினிமா சரியாக வந்திருக்கிறதா வரவில்லையா என்பதை பட்டிமன்றம் மாதிரி இல்லாமல் அதனதன் நியாயமான பக்கத்தில் இருந்து பேசுகிறேன் என்று சொன்ன புள்ளியே கவர்ந்தது. அதை சரியாகவும் பேசி முடித்தார். தமிழ் சினிமாவில் இலக்கியம் எப்படி இருக்கிறது? அதற்கிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை நியாயமான முறையில் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். இலக்கிய பரீட்சையும் உலக சினிமா பரீட்சையும் அத்துடன் தமிழ் சினிமாவில் நிஜமான உள்ளரசியல் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்துமே எம் கே மணி இதற்கு சரியான ஆள். மற்றவர்கள் யாரேனும் இருந்தாலுமே ஏதேனும் ஒன்றில் ஒருபக்க சார்புடையவர்களாக இருப்பார்கள். மணி ஸார் இரண்டிலும் balanced ஒர

மொழிபெயர்ப்பில் மெத்தனம் -1:

Image
மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு நியாயம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அரசியல்-கலாச்சார சூழல், மனநிலை, மொழி இவற்றின் புரிதல் அவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் மொழிபெயர்ப்பின் சிறப்பு இருக்கும்.                        ~அமரந்தா . நடுகல் இதழில் வெளிவந்த வே.நி.சூர்யா அவர்களின் மொழிபெயர்ப்பை கீழே படிக்கலாம். இது franz kafkaவின் The vulture எனும் கதையின் மொழிபெயர்ப்பு. Franz kafka //                  வல்லூறு: வல்லூறு ஒன்று என் பாதங்களை கொத்திக்கொண்டிருந்தது. அது ஏற்கனவே என் பூட்ஸை கிழித்து காலுறைகளை கந்தலாக்கிவிட்டது. இப்போது என் பாதங்களை கொத்திக் கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் என் பாதங்களை அது கொத்தியது. ஓய்வின்றி அப்பறவை என்னை பலமுறை வட்டமிட்டது. பின்னர் திரும்பவும் அதனுடைய வேலையை தொடர்ந்தது. அவ்விடத்தை கடந்துசென்றுகொண்டிருந்த ஒருவர் இதை நின்று கவனித்தார். பின்னர், இந்த வல்லூறால் ஏன் துன்பப்படுக

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :

Image
வசனத்தை உடைத்துப் போடுவதல்ல புதிய கவிதை. பொருளம்சத்தினால் மட்டுமே நிர்ணயிக்கப்படுவதுடன், வசனத்துக்கு எட்டாத கவித்துவத்தை கொண்டிருப்பதால்தான் புதிய கவிதையாகிறது. ~ பிரமிள் . இன்றைய உலகில் குழந்தைகளை விட அதிகமாக பிரசவிப்பது புதிய கவிதைகள் தான். அதாவது வசனத்தையை உடைத்து உடைத்து எல்லோரும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். படித்தவன் படிக்காதவன் என்றெல்லாத பாகுபாடின்றி கவிதை அனைவரையுமே கவருகிறது. அதனாலேயே எல்லோரும் முயற்சித்து பார்க்கிறார்கள். இசை எழுதும் கவிதைகள் கூட வசனத்தை உடைத்துப் போடுவது மாதிரி தான் தெரியும். ஆனால் சில வரியில் கவித்துவம் ஆகும் வரியையும் அதனுடன் சேர்த்து எழுதுவது தான் அவரை சாதாரணமாக என்டர் பட்டனை தட்டி தட்டி எழுதும் கவிஞர்களிடமிருந்து பிரித்து காட்டுகிறது. தனது சிவாஜி கணேசனின் முத்தங்கள் தொகுப்பின் முன்னுரையில் இசை பின்வருமாறு குறிப்பிடுகிறார். //கவிதை என்பது" என்று துவங்கி ஏதாவது சொல்லலாம். உங்களுக்கு போர் அடிக்கும். நீங்கள் தான் எத்தனை "கவிதை என்பது" வை கேட்டு விட்டீர்கள், எத்தனை எத்தனையோ பேர் என்னென்னவோ சொன்ன பிறகும் இன்னும் சொல்ல ஏதேனு

திருட்டுச் சாப்பாடு:

Image
பிக்பாஸின் சனிக்கிழமை நிகழ்ச்சியை இன்றுதான் பார்த்தேன். அதில் வறுமை- சாப்பாடு- திருட்டுச் சாப்பாடு என்ற கண்ணிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த காட்சிகள் கூட சிறப்பாகவே இருந்தது. சென்ட்ராயன் மாதிரி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். கல்லூரியில் எனக்கென்று ஒரு கூட்டம் எதுவும் கிடையாது. எந்தக் கூட்டத்திலும் சீக்கிரமே சேரவும் மாட்டேன். ஆனால் ஒரு கூட்டத்துடன் மட்டுமே அதிகமாக நேரம் செலவழிப்பேன். கல்லூரி என்றாலே அந்தக் கூட்டம் தான். கல்லூரி விடுதி உணவு தொல்லையால் அந்தக் கூட்டம் கல்யாண மண்டபத்தில் சாப்பிட கிளம்பும். நான் போவதில்லை. பிறகு தனியறை ஒன்றில் சேர்ந்து வசிக்கும் போது நானும் கல்யாண மண்டபம் போவது இயல்பாக நடந்தது. அந்த மண்டபத்திற்கு செல்லும் முன்பு நாங்கள் ஆயுத்தம் ஆவது சுவையான ஒன்று.  எல்லோரும் தங்களது ஆடைகளை Sharing செய்வது வழக்கம். விடுதி வாழ்க்கை வாழாதவர்களால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. கல்லூரிக்கு சுமாரான ஆடையை அணிந்து கொண்டு வருபவன் கூட கல்யாண மண்டபத்திற்கு அழகான ஆடையை இறவல் வாங்கி அணிந்து வருவார்கள். இந்த விஷயத்தில் எல்லோருமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதேதான் அந்த க