திருட்டுச் சாப்பாடு:




பிக்பாஸின் சனிக்கிழமை நிகழ்ச்சியை இன்றுதான் பார்த்தேன். அதில் வறுமை- சாப்பாடு- திருட்டுச் சாப்பாடு என்ற கண்ணிகள் என்னை மிகவும் கவர்ந்தது. அந்த காட்சிகள் கூட சிறப்பாகவே இருந்தது. சென்ட்ராயன் மாதிரி நிறைய ஆட்கள் இருக்கிறார்கள்.

கல்லூரியில் எனக்கென்று ஒரு கூட்டம் எதுவும் கிடையாது. எந்தக் கூட்டத்திலும் சீக்கிரமே சேரவும் மாட்டேன். ஆனால் ஒரு கூட்டத்துடன் மட்டுமே அதிகமாக நேரம் செலவழிப்பேன். கல்லூரி என்றாலே அந்தக் கூட்டம் தான். கல்லூரி விடுதி உணவு தொல்லையால் அந்தக் கூட்டம் கல்யாண மண்டபத்தில் சாப்பிட கிளம்பும். நான் போவதில்லை. பிறகு தனியறை ஒன்றில் சேர்ந்து வசிக்கும் போது நானும் கல்யாண மண்டபம் போவது இயல்பாக நடந்தது.

அந்த மண்டபத்திற்கு செல்லும் முன்பு நாங்கள் ஆயுத்தம் ஆவது சுவையான ஒன்று.  எல்லோரும் தங்களது ஆடைகளை Sharing செய்வது வழக்கம். விடுதி வாழ்க்கை வாழாதவர்களால் இதையெல்லாம் புரிந்து கொள்ள முடியாது. கல்லூரிக்கு சுமாரான ஆடையை அணிந்து கொண்டு வருபவன் கூட கல்யாண மண்டபத்திற்கு அழகான ஆடையை இறவல் வாங்கி அணிந்து வருவார்கள். இந்த விஷயத்தில் எல்லோருமே ஒத்துழைப்பு கொடுப்பார்கள். அதேதான் அந்த காலம் பொற்காலம்.

இதில் வறுமை மறைமுக காரணமாகவே இருக்கும் எங்கள் எல்லாருக்குமே. நாங்கள் அதை மிகை உணர்ச்சி ஆக்க விரும்பியதில்லை. முதலில் சுவையான வகை வகையான சாப்பாடு மற்றும் பிரியாணி என்பதற்காகவே நிறைய மண்டபங்களில் சாப்பிட்டு இருக்கிறோம். காஞ்சிபுரத்தில் எங்கள் கல்லூரி மாணவர்கள் (புதிய அரசு கல்லூரி. நாங்கள் தான் முதல் மாணவர்கள். ஆதலால் நிறைய ஜூனியர்கள் ) ஜூனியர் மாணவர்கள் உட்பட தகவல் தெரிவிப்பார்கள். கூட்டமாக சென்று நிம்மதியாக சாப்பிட்டு வருவோம். ஒருவேளை இரவுச் சாப்பாடு காசை மிச்சம் படுத்துவோம். நாங்கள் அதிகமாக சாப்பிட்ட மண்டபம் என்றாலே "அருணா மண்டபம்" தான். காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து அருகிலே இருக்கும். காஞ்சிபுரத்திலே நல்ல வசதியான ஆடம்பரமான மண்டபம். அங்கு யாரும் எதுவும் கேட்கமாட்டார்கள் என்ற காரணத்தால் நிறைய நாட்கள் அங்கு தான். அந்த மண்டபத்தை UCEK மாணவர்கள் யாரும் மறந்திருக்க போவதில்லை.

https://youtu.be/71AsN6zhocM அருணா மண்டபத்தை வீடியோவில் பார்க்கலாம்.

பசியை அவமானத்தை எதிர்க்கொள்ளாத ஒருவர் எழுதும் கதைகளை படிக்கும் போதே உணர்ந்திருக்கிறேன். அது உண்மையில் பசியை அவமானப்படுத்துவதாக இருக்கிறது. நண்பர் ஒருவர் கூட இப்படி ஒரு கதையை எழுதி சொதப்பியிருந்தார். நட்ஹம்சனின் பசி நாவலை படிக்கும் போது ஏற்பட்ட உணர்வு தாக்கத்தை எழுத தெரியாமல் தவித்திருக்கிறேன். போகட்டும்.

பிரியாணிக்கு தனியாக சர்ச் இருக்கும். இரயில் நிலையம் அருகில். நிறைய மண்டபங்களில் எங்கள் கல்லூரி மாணவர்கள் ஒருவராவது இருந்தே தீருவர். கல்யாண சீசன் இல்லாத போது ஏங்கியதுண்டு. ஒருநாள் ஒரு சுமாரான மண்டபத்திற்கு போக வேண்டிய சூழ்நிலை. ஏனெனில் மற்ற பெரிய மண்டபத்தில் திருமணம் ஏதும் நிகழவில்லை. ஆதலால் பத்து நபர்களுக்கு ஒரே மண்டபத்தில் ஒரே நேரத்தில் உட்கார்ந்து தவறிழைத்து விட்டோம். எப்போதுமே இரண்டு இரண்டு பேராக போய் கூட்டத்தில் கலந்து விடுவோம். சந்தேகம் வரக்கூடாது என்பதற்காக. ஆனால் அன்று எல்லோருமே ஒரே வரிசையில் உட்கார்ந்து விட்டோம். வழக்கமாக எல்லாமே பரிமாற்றப்பட்டது. சினிமாவில் வருவது போல சாப்பிடும் போது "யாருடா நீங்க? உங்கள யாரு உள்ள விட்டது? எழுந்து வெளியே போங்க" போன்ற சம்பிரிதாயமான வார்த்தைகள். ஏதேனும் கெட்ட வார்த்தைகள் கூட சொல்லிருக்கலாம். கேட்கவில்லை எங்களுக்கு. எல்லோருமே ஒரு பிடி கூட சாப்பிடமால் எழுந்து வெளியே வந்து விட்டோம்.

அது கூட்டமாக நடந்ததால் நாங்கள் சிரித்துக் கொண்டேதான் வந்தோம். "மச்சான் அவன் ரியாக்ஷன் பார்க்கனுமே" என்று எங்களது சில நண்பர்களையே கலாய்த்து கொண்டு வந்தோம். ஆனால் தனிப்பட்ட ரீதியில் எல்லோருமே அன்று அசிங்கப்பட்டோம். தனித்தனியாக எல்லோருமே அதை சொன்னதுண்டு பிரிதொரு நாளில். எங்களது நண்பர்கள் / கல்லூரி மாணவர்கள் கல்யாணம் நடந்தால் அதையெல்லாம் நிவர்த்தி செய்வோம் என்று மனதாக ஒவ்வொருவரும் வெளியே சொல்லாத சூழுரைகளை செய்திருப்போம். செய்தேன். செய்தார்கள்.

அந்த மண்டபத்தில் கல்லூரி பெண்களை பார்த்து விட்டால்  இதெல்லாம் தெரியக்கூடாது என்று கெத்து பாவ்லா எல்லாமே காட்டியதுண்டு. இருப்பினும் எப்படியும் விஷியம் கசிந்திருக்கும். விடுதியில் பல நண்பர்கள் நைட்டு வாட்ச்மென் மாதிரி லேடீஸ் ஆஸ்டலுக்கு பலபேர் சுற்றி இருக்கிறார்கள். மேலும் எல்லாருமே வளர்ந்து விட்டார்கள். ஆதலால் திருட்டு சாப்பாடு பற்றி எழுதியதை எனது நண்பர்கள் தம்பிகள் கல்லூரி மானம் மற்றும் தனிப்பட்ட கெத்தை குழைத்துவிட்டதாக நினைக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன். நினைத்தாலும் எதுவும் பிரச்சினை இல்லை என்பது வேறு.

இப்போதும் எங்களது ஜூனியர் மாணவர்கள் இதை தொடர்கிறார்களா என்று தெரியவில்லை. 

Comments

  1. Ice cream fruit dessert nu 2 3 murai saptu matikama veliye varumbudhu yedhaiyo sadhicha sandhoasam
    ������������

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :