Posts

Showing posts from October, 2018

சிறுபான்மை எனும் மூடத்தனம் :

Image
பெரும்பான்மைக்கு எதிராக குதிக்கும் சிறுபான்மையில் இருக்கும் அதிகாரத்தை யாரும் எதிர்த்து பேசுவதில்லை. அதிலுருக்கும் குறைகளை தெரிந்துமே கூட வாயைத் திறந்து பேசுவதில்லை. இதை முன்னிருத்தி பேசுவதே கூட தேசத்துரோகத்தை விட குற்றமாக கருதப்படுகிறது. இல்லை  இல்லை தேசத்துரோகம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து போயிற்று. அநியாயத்தை கண்டால் பொங்கும் போராளிகள் போல நேர்மைக்கு மாறான ஒன்றாக கருதும் சிறுபான்மையில் நடக்கும் மூடத்தனத்தை எதிர்த்து சில மனக்குமுறல்கள். இந்தியாவின் சிறுபான்மை மதமான இசுலாம் கிறித்தவம் மதங்களில் இருக்கும் குரான் பைபிளில் இருந்து நீங்கள் எந்த ஒரு வார்த்தையையும் சேர்க்கவும் முடியாது. பிரிக்கவும் முடியாது. பைபிள் ஆவது புதிய ஏற்பாடு வந்தது. ஆனால் குரானில் ஒரு வார்த்தை கூட மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. வழக்கொழிந்து போன கையேடுகளை இன்னமும் புனிதத்தன்மை மாறாது பாதுகாப்பதில் இருக்கும் சூட்சுமம் என்ன? கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். பழைமை எனும் பெயரில் மூடத்தனம் மிகுந்திருக்கிறது. கடவுளுக