சவரக்கத்தியும் அபத்த வாழ்கையும் :


ஒரேயொரு பிரார்த்தனைதான்
குச்சியைக் காட்டியதும்
குழையும் மிருகமென
இவன் முன் நான் நிற்பதை
என் குழந்தைகள்
ஒருபோதும் பார்க்கக்கூடாது.

"அப்போ நீ ராஜா இல்லியாப்பா?"
என்றவர்கள்
ஒருபோதும் என்னைக் கேட்டிடக்கூடாது.

- போகன் ஷங்கர் ( தடித்த கண்ணாடி போட்ட பூனை தொகுப்பிலிருந்து ).


எனக்கு இந்த வரிகளில் கிடைத்த அபத்தமான வாழ்க்கையை பற்றிய உணர்வை அப்பட்டமாகவே சவரக்கத்தி படத்தில் ஒரு புள்ளியில் பார்த்து லேசாக கண் கலங்கிவிட்டேன்.

முதல் ஐந்து நிமிடம் சிரமமாகவே இருந்தது படத்தினுள் நுழைய. ஆனால் அந்த டிராபிக் சிக்னல் காட்சிகளுக்கு பிறகு படத்தில் மூழ்கி விட்டேன். ஒரு முறை மணி ஸார் சொன்னது நியாபகம் வந்தது. அது - “ உண்மை ஜெயிப்பதெல்லாம் கிடையாது; மெஜாரிட்டி ஜெயிக்கும் அல்லது பலம் இருப்பவன் ஜெயிப்பான்” அந்த காட்சியில் இதுதான் நடக்கும்.

படம் முழுவதுமே அபத்தமான வாழ்வைப் பற்றிய நகைச்சுவைகள் நிறைந்திருந்தன. எளிய மக்களிடம் நெஞ்சை நிமிர்த்தும் காவல்துறையினர் உயரதிகாரிகளிடம் காலில் விழாத குறைதான். பொதுவாகவே மிஷ்கின் படங்களில் வாழ்க்கை பற்றிய அபத்தம் பற்றிய காட்சிகள் இருக்கவே செய்யும். சவரக்கத்தியில் படம் முழுவதுமே அபத்தம் நிறைந்திருந்தது. பெண் திருட்டுக் கல்யாணம் செய்யப்போவதை அறிந்த பெற்றோர்களின் சீற்றத்தையும் கனிவையும் பார்க்க முடிந்தது. இது படத்தில் வந்த எல்லா கதாபாத்திரங்களும் பொருந்தும். அந்த டீக்கடையில் வரும் ஆசாமி, அந்தக் கடையின் பெயர் (பொய்யா மொழி தேனீர் கடை) கூட செம்ம. ரவுடி போலிஸ் பொதுஜனம் எல்லாருக்குமே இருக்கும் அபத்தம் வெளிப்பட்டது. ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் மிஷ்கின் அழகாக எழுதியிருப்பதாக தோன்றுகிறது. திரைக்கதை எழுதுவது எப்படி என்ற சூட்சமம் மிஷ்கினிடம் எப்போதுமே இருக்கும் ஒரு நல்ல விஷயம்.



மிகை உணர்சியான ஆட்கள் சற்று உறுத்தலாக இருக்கலாம். அப்படி இருக்கவே முடியாது என்று சொல்லிவிட முடியாது இல்லையா. பெத்தன்னா என்ற ஒரு கதாபாத்திரம் போதும். எல்லோரையும் தூக்கி சாப்பிடும் கதாபாத்திரம். எல்லா மிகை உணர்ச்சி கதாபாத்திரத்தையும் ஃபேலன்ஸ் செய்யும் ஒரு கதாபாத்திரம். அந்த குழந்தைகள் கூட பெத்தன்னா மாதிரி தெளிவான கதாபாத்திரங்கள் தான். சீரியஸான நகைச்சுவை படம் தான். சவரக்கத்தி பாடல் நினைத்தது போலவே வந்த இடம் செம்ம. அரோல் கரோலி அவரது இசையை சரியாகவே செய்திருக்கிறார். அபத்தங்கள் நிறைந்து தான் இந்த மனித வாழ்க்கை என்பதை படம் நெடுகிலும் காட்சிகளால் உணர்ந்ததால் படம் எனக்கு பிடித்திருக்கிறது டாட். ங்கோத்தா மிஷ்கின் லவ் யூ. 💚💚💚

Comments

Popular posts from this blog

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

திக்கற்றவைகளின் பரிகாசக்காரன் கவிஞர் இசை :