தகப்பனை கண்டடைதல்

துருக்கிய இயக்குனர் Nuri Bilge Ceylonனின் The Wild Pear Tree என்ற படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என்பது என் துணிபு. அதன் கரு தந்தையை கண்டடையதல். 


மாம்பழத்தின் கொட்டையை சுற்றி வளரும் சதைப்பகுதி போல படத்தின் கருவை சுற்றி இருக்கும் நிகழ்வுகள் மிகவும் ருசியானது. துருக்கியின் நிலப்பரப்பை அந்த நிலங்களின் மரங்களை காற்றினை நம் கண்களுக்கு முன்னால் இயக்குனரால் எளிமையாக காட்டிவிட முடிகிறது. லிட்ரலி நாம் அங்கு வசிக்க துவங்கி விடுகிறோம். Local is International என்ற வாக்கியத்தை நிறைவு செய்யும் படம். துருக்கியின் Nativityயை பார்த்தது போலவே இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரம் கல்லுரியை முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவன். கூடவே தான் எழுதிய நாவல் ஒன்றை பதிப்பிக்க பதிப்பகத்தாரை தேடித் திரிந்து கொண்டிருப்பான். அவ்வப்போது அவன் சந்திக்கும் மக்கள் அவர்களுடனான அவனது உரையாடல்கள் அனைத்துமே அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். முன்னால் காதலியுடன் ஒரு எழுத்தாளருடன் நண்பர்களுடன் பதிப்பகத்தாருடன் என்று எல்லாமே மனதில் நிற்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. 

எல்லா ஆண்களுக்கும் போலவே ஆரம்பத்தில் தனது தகப்பனின் பொறுப்பற்ற தனம் மீது எல்லையற்ற எரிச்சல் ஒன்று தொற்றிக்கொண்டிருக்கிறது. இந்த மாதிரி குடும்பத்தில் பிறந்தவர்களில் நானும் ஒருவன் என்பதால் என்னால் எளிமையாகவே தொடர்பு படுத்திக் கொள்ள முடிகிறது. பொருளாதார ரீதியாக குடும்பத்தை நிலைநிறுத்தாத ஆண்கள் மீது எல்லேருக்கும் தான் கோபம் இருக்கும். பணம் தான் முக்கியமான ஒன்று. அது சம்பாரிக்காத ஆண்கள் மீது பாசமில்லாமல் போவது இயற்கை. 


தனது நாவலை பதிப்பிக்க அப்பாவின் நாயை விற்று அவனே பதிப்பிட்டு புத்தகத்தை வெளியிடுகிறான். அவனது அப்பா அந்த நாயின் மீது மிகுந்த ஆர்வம் உடையவராக இருந்தார் என்பதை பின்னர் அறிகிறான். குற்ற உணர்ச்சி அவனை தன்னை கண்டடைய வைக்கிறது. பின்னர் இராணுவத்தில் சேர்ந்து குடும்ப நிலைமையை சரிசெய்கிறான். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தந்தையை சந்திக்கிறான். தனது நாவலை பற்றி செய்திதாளில் வெளிவந்த செய்தியை கத்தரித்து வைத்திருப்பதை பார்க்கிறான். நாவலை குறித்து அவரது கருத்துக்களை கேட்கிறான். அவருடைய பொருட்படுத்துதல் அவனை நெகிழ்வடைய வைக்கிறது. அவரை புரிந்து கொள்கிறான். அவரது தோட்டம் பற்றிய முயற்சிகள் ஆர்வமில்லாமல் இருந்தவன் அவருக்கு உதவிகரமாக இருக்கிறான். இறுதிக்காட்சி அந்த கிணற்றினை தோண்டி தோண்டி நீர் வரவழைக்க அவனது முயற்சிகள் விஷூவலாக பார்க்கும்போது கனமாக மனதில் இறங்குகிறது. அவனது இந்த மாற்றம் இயற்கையாக இருக்கிறது. ஒவ்வொரு ஆணுமே அவரது தகப்பனின் எச்சம் என்ற கருத்து மேலும் வலுவடைகிறது. அவன் அவனது அப்பனை தொடர்கிறான். 


நூரி சைலானின் படங்கள் குறித்து தனியாகவே ஒரு கட்டுரை எழுத வேண்டும். அது பின்னர் ஓர் நாளில் நிறைவேறும். நீண்ட உரையாடல்கள் அதனூடாக வெளிப்படும் போலித்தனங்கள் வாழ்க்கை கலை மனிதாபிமானம் குறித்த எதார்த்தமான தத்துவங்கள், காற்றில் அலையும் இலைகள், அமைதி மற்றும் தனிமை ததும்பும் காட்சிகள், பனி நிரம்பிய நிலப்பரப்பு என்று  அவரது தனித்துவம் படம் முழுவதும் படறியிருக்கிறது. 


கிட்டத்தட்ட இதே மாதிரி கரு இரண்டு மலையாள படத்தில் பார்த்தேன். ஒன்று Carbon. இன்னொன்று Sudani from Nigeria. ஆனால் இந்த மூன்று படங்களுமே அதனதன் அளவில் தனித்துவமான திரைக்கதைகள். மலையாள படங்களின் வளர்ச்சி பிரமிக்கத்தக்க ஒன்று. அதுவும் தனியாக விவரிக்க வேண்டிய ஒன்று. 



Every son follow his father's habbit .தகப்பனை கண்டடைதல் என்பது தன்னையே கண்டடைதல் மாதிரி. தன்னை கண்டடைதல் என்பது வாழ்க்கையை கண்டறிவது மாதிரி. தகப்பனின் எச்சமே ஒவ்வொரு குழந்தைகளும். 

Comments

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?