இக்கால மாணவர்கள் : ஜெயமோகனும் எதிர் தரப்பினரும்

 


எவ்வளவோ பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது எல்லோரது வாழ்க்கையிலும். இதில் இதை பேச வேண்டுமா? ஆமாம். வரும் தலைமுறையே நமது பள்ளி மாணவர்கள் தான். அவர்களை பற்றி பேசுவது நமது குழந்தைகளை பற்றி பேசுவது போல மிகவும் முக்கியமானது.





இன்ஸ்டாகிராமில் தான் முதன் முதலாக ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை இழிவாக பேசிவிட்டார் என்ற பதிவினை பார்த்தேன். அதை எழுதியவர் அழகிய பெரியவன். அவரது கதைகளையும் படித்துள்ளேன். இரண்டு முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. அவரது பதிவு லிங்க் இங்கே. அதை படித்து விட்டு ஜெயமோகன் என்ன எழுதியுள்ளார் என்றும் பார்த்து  விடலாம் என்று பார்த்தேன். அதன் லிங்க் இங்கே. இரண்டையும் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். ஜெயமோகனையும் வாசித்து இருக்கிறேன். முதலில் பெரும் ஈடுபாடு கொண்டு படித்து பின்னர் விலகியும் இருக்கிறேன். இருவரது கதைகள் பற்றி வேறொரு நாளில் கட்டுரை எழுத வேண்டும். சரி இப்போது இந்த பிரச்சினைக்கு வருவோம்.



  1. ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே பார்ன் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். உண்மையில் எல்லோருமே  ( தனியார் பள்ளி மாணவர்கள் கூட ) பார்க்கிறார்கள் என்பது 💯 உண்மை. மொபைல் போன் வளர்ச்சி சாபமாகவே இருக்கிறது. Mobile phones addiction தற்போது இந்தியாவின் முன்னணி நோய்.இதில் ஜெயமோகன் சொல்வது மொத்தமும் உண்மை. பப்ஜி ஃப்ரீ ஃபயர் என்று மொத்த இந்தியாவுமே ஆன்லைன் விளையாட்டில் மூழ்கியுள்ளது. தமிழ்நாடு ஆந்திரா கர்நாடகா மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் பயணம் செய்து தங்கியிருந்து இதையெல்லாம் கண்கூடாக பார்த்து இருக்கிறேன். 


  1. ஆனால் அழகிய பெரியவன் அரசு பள்ளி மாணவர்கள் அப்படி இல்லை ; மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்து வந்து படிக்கிறார்கள் என்று முரட்டு வாதம். அவர் அரசுப் பள்ளி வாத்தியார். ஒருவேளை தொடக்கப்பள்ளி என்பதால் அப்படி நினைக்கிறாரா தெரியவில்லை. அல்லது வேண்டுமென்றே ஜெயமோகன் சொல்லிவிட்டதால் அடிக்கிறாரா புரியவில்லை. 


  1. இதில் ஜெயமோகனும் தனியார் பள்ளி ஏதோ ஒழுக்கமானது என்று சொல்லிக் கொண்டே வருகிறார். உண்மையில் அப்படி இல்லை. இப்போது எல்லா பள்ளி மாணவர்களும் அப்படியேதான் இருக்கிறார்கள். ஒப்பீட்டளவில் தனியார் பள்ளி ஒழுக்கமாக இருப்பதாக பாவனை மட்டுமே வெளியில் தெரிகிறது. அது உண்மை இல்லை. இருவருமே பாதி உண்மைகளை மட்டுமே பேசுவதாக அறியப்படுகிறது. 


  1. மாணவர்களை அடிப்பது சரி என்பது ஜெயமோகன் கருத்து. நானும் அதை வழிமொழிகிறேன். ஆனால் முற்றாகவே அதை கடைபிடித்து அதன் பலவீனங்களும் அறிவேன். கொஞ்சம் கூட பொறுப்பில்லாமல் தான் மாணவர்கள் வளர்ந்து வருகிறார்கள். கெத்து என்ற பெயரில் மாணவர்கள் செய்வது அட்டூழியம். சரக்கு அடிச்சா தான் கெத்து என்ற ஒரு சூழல் இளைஞர்கள் மத்தியில் உருவாகிறது. நிறைய மாணவர்கள் சரக்கு கஞ்சா அளவுக்கு போய்விட்டார்கள். கஞ்சா எப்படி இவ்வளவு எளிதாக கிடைக்கிறது ? அரசுதான் கட்டுப்பாடு விதிக்க வேண்டும். கல்லூரிகள் கூட இப்படியெல்லாம் நிகழ்வதில்லை. அந்தளவுக்கு மாணவர்கள் Toxic ஆக வளர்ந்து வருகிறார்கள். 


  1. ஜெயமோகன் 10% மாணவர்கள் மட்டுமே பொறுக்கி தனம் செய்வதாக கூறியுள்ளார். ஆனால் உண்மையில் அதன் சதவீதம் அதிகமாகவே இருக்கிறது. அரசு பள்ளி மாணவர்கள் ஆசிரியைகளிடம் இழிவாக நடந்து கொள்கிறார்கள் என்பதே எதார்த்த உண்மை. சினிமா மோகம். 




இது எதையுமே படிக்காமல் ஜெயமோகன் என்றதுமே மட்டையடி அடிக்க கிளம்பி விடுகிறார்களோ என்ற சந்தேகம் எழுகிறது. ஜெயமோகன் வன்மம் பிடித்தவராக எழுதுகிறார் என்கின்றனர். உண்மையில் யார் வன்மம் பிடித்தவர் என்பது இரண்டையும் படித்தவர்கள் பார்வைக்கே விட்டு விடுகிறேன். 



ஜெயமோகனுக்கு தனியார் பள்ளிகள் குறித்து பிம்பம் பொதுவாகவே எல்லா பெற்றோருக்கும் இருப்பது போலத்தான். ஆனால் அது எதார்த்த உண்மையில்லை. நான் தனியார் பள்ளி குறித்து ஒரு நாவல் எழுத வேண்டும் என்று நீண்ட வருடங்களாகவே நினைத்துக் கொண்டு வருகிறேன். அதற்கான அனுபவம் எனக்கு இருக்கிறது. ஆனால் எழுதும் திறன் மீது சந்தேகமிருப்பதால் தள்ளிக்கொண்டே செல்கிறது.



நான் வலதுசாரி ( ஜெயமோகன் ) ஆதரவும் கிடையாது. இடதுசாரி ( அழகிய பெரியவன்) கிடையாது. தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும்பாலும் இடதுசாரி தனம் சாய்வு கொண்டவனாகவே இருக்கிறேன் என்பது எனது அவதானிப்பு. ( அவதானிப்பு என்ற வார்த்தை உபயோகமே ஜெயமோகனிடமிருந்து வந்ததாக எனக்குமே என்மீது சந்தேகம் எழுகிறது ). அதற்காக யார் என்ன சொன்னாலும் கேட்டுக் கொள்ள மாட்டேன். எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் மெய்ப்பொருள் காண்பதே அறிவல்லவா. 





Comments

Popular posts from this blog

ஜெ. சைதன்யாவின் சிந்தனை மரபுகள்- ஜெயமோகன்

தேவதேவனும் ஜென் கவிதைகளும்

கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?