Ante sundaraniki ஏன் சிறந்த கமர்ஷியல் படம்?
ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை நமது தென்னிந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருக்கும் ஆசைதான். அப்படிப்பட்ட ஆசைக் கொண்ட சிறுவன் சந்திக்கும் முதல் முயற்சியே ஆகப் பெரும் தோல்வியில் முடியும். இதனால் இனிமேல் அந்த முயற்சியே கூடாதெனும் அப்பா. ஆதரவு தெரிவித்த அம்மாவும் தவறாகிவிட்டதற்கு குற்றவுணர்வில் தத்தளிக்கும் கதாபாத்திரம். ஐயர் குடும்பம். கலாச்சாரம் அது இது என்று கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம். ஹீரோ ஆகிறேனென செய்த சேட்டைகளே அவனை கேலி செய்யவும் உதவுகிறது.
உண்மையில் ஒருவன் ஜெயிக்கும் முன்பு எதுவுமே பேசக்கூடாது. தோற்றுவிட்டால் அதுவே அவனை படுகுழியில் தள்ளிவிடும். அஞ்சான் லிங்குசாமி முதல் பீஸ்ட் நெல்சன் வரை பார்த்து விட்டோம்.
இப்படியாக நகைச்சுவையாக தொடங்கும் நானி கதாபாத்திரம் பிற்காலத்தில் ஹீரோ ஆனாரா இல்லையா என்பது மட்டுமே கதையல்ல. இந்த கதாபாத்திரம் வைத்துக்கொண்டு சகல மீறல்களையும் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர்.
- ஏற்கனவே காதலித்து பிரிந்த ஹீரோயின். முதன் முறையாக காதலிக்கும் ஹீரோ. இதுவே தெலுங்கில் மிகப்பெரிய மீறல் தான். எவ்வளவு நாளைக்கு தான் ஆணின் காதலுக்கு பெண்கள் மருந்து போடுவார்கள்.
- படத்தில் நிறைய நல்ல moments வருகிறது. குறிப்பாக அவன் சினிமா ஹீரோ ஆகாமலே நிஜத்தில் ஹீரோ ஆகும் தருணம் வரும். அப்போது அவனது அம்மா கண்ணீர் விடுவார். இதை மிகவும் இயல்பாக காட்சிப் படுத்தியிருப்பார்கள். திரைக்கதையில் இந்த இடம் கூடி வரும் வேளையில் மனம் லேசாகி விட்டது. நல்ல படங்களில் நிச்சயமாக இதுமாதிரி நல்ல கணங்கள் இருந்தே தீரும். படத்தில் இப்படி 3,4 இடங்கள் இருந்தன. (சமீபத்தில் பார்த்த கார்கி படத்தில் இப்படி எதுவுமே இல்லை. ஆனால் படம் வேற லெவல் என்றெல்லாம் சொன்னார்கள்)
- குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பெண்களுக்கு கட்டாயம். அன்னையர் தினம் வாழ்த்துக்கள் நிரம்பும் நாட்களெல்லாம் குழந்தைகள் இல்லாத பெண்கள் படும் பாடுகள் பற்றிய நினைவு வரும். எனக்கு தெரிந்த ஒரு அக்கா சில வருடங்களுக்கு குழந்தை இல்லாமல் பல சித்ரவதைக்கு ஆளானார். எதார்த்தம் இதுதான். பிள்ளை பெற்றுக் கொள்ளாவிட்டால் சமூகம் மதிப்பதில்லை.
- பெண்களுக்கு மட்டுமா இந்த நிலைமை. பெண்மை மட்டுமல்ல ஆண்மைக்கும் பிரச்சினை. குழந்தைகள் பெற்றெடுக்க இயலாத பெண்களை விடவும் குழந்தைகள் பெற்றெடுக்க இயலாத ஆண்கள் மோசமாக நடத்தப்படுவார்கள். ஆண்மை என்ற வார்த்தையிலேயே எவ்வளவு பெரிய அரசியல்.
- குழந்தைகள் சமூக கட்டமைப்பு ஜாதி மதம் மீறல்கள் என முக்கியமான அனைத்தையும் கோள்விக்கு உட்படுத்தியுள்ள அற்புதமான படம்.
- நம்பிக்கை சார்ந்த விஷயங்களை மிகவும் பக்குவமாக கையாண்டு இருக்கிறார்கள். நமக்கே சில நேரங்களில் நடக்காது என்றாலும் கடவுளிடம் வேண்டிக் கொள்ளும்படியாக சூழ்நிலைகள் வருவதுண்டு.
- இந்து மதத்தில் உள்ள குறைகளை மட்டுமல்லாமல் கிறிஸ்தும மதத்தில் பின்பற்றும் மூடநம்பிக்கைகள் குறித்தும் பேசியிருக்கிறார்கள்.
- Fiction is always gives high. அடுத்து என்ன நடக்கும்? இந்த கேள்வி படம் முடியும் வரை இருக்கும். ஹீரோ மேலதிகாரி கூட இப்படி தான் மாட்டிக் கொள்வார். கதைக்கு மயங்காத ஆட்கள் உண்டா.
- இந்து மதத்தில் எல்லாவற்றுக்கும் பரிகாரம் இருக்கும் என்பார்கள். அதன் பலம் பலவீனம் நன்றாகவே காட்சிப் படுத்தியிருப்பார்கள். முக்கியமாக விமர்சித்து இருப்பார்கள்.
- பொய் சொல்வதற்கு காரணமே உண்மையை எதிர் கொள்ள தைரியம் இல்லாததுதானே.
- நஸ்ரியாவின் கதாபாத்திரம் சிறப்பான வடிவமைப்பு. எல்லாத்தையும் சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும். வழக்கம் போல நஸ்ரியா அருமையான நடிப்பு. ஞானியும் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தும் நடிப்பு. திரைக்கதையில் எல்லாம் நன்றாக பொருந்துகிறது. அதுதான் படத்தின் பலம்.
இதுபோல் காரணங்கள் பல அடுக்கலாம். நெட்பிளிக்ஸில் படத்தைப் பாருங்கள். தமிழ் டப்பிங் இருக்கும். ஆனால் தெலுங்கு மொழியிலே பாருங்கள். அதன் தரம் புரியும். கமர்ஷியல் படம் தான். நகைச்சுவை. காதல். சரிவிகித அளவில் எமோசன் கலந்து எடுக்கப்பட்டிருக்கும் அன்டே சுந்தரனகி சமீபத்தில் தெலுங்கில் வெளிவந்த மிகச் சிறந்த கமர்ஷியல் திரைப்படம் என்பேன்.
இந்த படத்தின் இயக்குநரின் முந்தைய படம் (Brochevarevarura) பார்த்திருக்கிறேன். அதுவும் ஒரு சுவாரஸ்யமான திரைப்படம்தான்.
❤👍
ReplyDelete❤🩹
Delete