திராவிட அழகி
" கருப்பா இருக்காளே ! இவளா ஹீரோயின்? " " ஆம்பள மாதிரி இருக்காளே " என்ற stereotype படுத்தப்பட்ட சமூகத்தில் பாலுமகேந்திரா ஆசைப்பட்ட திராவிட அழகை கொண்டு வந்ததுற்கு பா. ரஞ்சித்திற்கு எவ்வளவு தூரம் நன்றி சொன்னாலும் தகும்.
சார்பட்டா படம் பற்றி சமூக வலைதளங்களில் ஏற்கனவே பலரும் எல்லா கோணங்களில் படத்தினை அலசி ஆராய்ந்து எழுதி எழுதி சலிக்க வைத்து விட்டனர். அதிலும் ரங்கன் வாத்தியார் அவரது மனைவியுடன் சில நொடி காதலை கூட சிலாகித்து விட்டனர் 😆. உண்மையில் இது தமிழ் சினிமாவில் ஒரு மைல்கள் என்றே சொல்லலாம். முக்கிய காரணம் அந்த கதாபாத்திரங்கள். தமிழில் இவ்வளவு துணை கதாபாத்திரங்களில் ( வேம்புலி, டேன்ஸிங் ரோஸ், டாடி, ரங்கன் வாத்தியார், வெற்றி, மாரியம்மாள், ரோஸியம்மா, மீரன், ராமன், மாஞ்சக்கண்ணன்,தணிகா,பீடி வாத்தியார்...) உயிர்ப்பு மிளிரியது மெட்ராஸ் படத்திற்கு பிறகு இதிலேதான். வடசென்னை யில் அத்தனை கதாபாத்திரங்கள் இருந்தாலும் அது இந்த அளவுக்கு இல்லை. சார்பட்டா படம் எப்படி கமர்ஷியல் படம் எடுப்பதற்கான ஒரு பாடமாகவே வரும் காலங்களில் இருக்கும் என்பது என் கணிப்பு. மராத்தியில் Sairat படம் எப்படி கமர்ஷியல் படத்திற்கான ஒரு Benchmark நிறுவியதோ அப்படி தமிழில் மெட்ராஸ், சார்பட்டா படங்கள் இருக்கும். மலையாளத்தில் இதை Premam செய்து காட்டியது. உண்மையில் கலைப்படம் எடுப்பதை விடவும் இந்த மாதிரி எடுப்பது சிரமம். வணிக ரீதியாகவும் வெற்றி அடைய வேண்டும் கலையாகும் தருணங்களும் விடுபடக்கூடாது.
Sports Genere படங்களில் இதில் தான் விளையாட்டு வீரர்களின் ஆணவத்தை சரியாக கோடிட்டு காட்டியுள்ளனர். அதை விமர்சனமும் செய்துள்ளனர். மாரியம்மாள் சொல்லும் வசனம் , " வெளாட்டுல எதுக்குடா மானத்தை கொண்டாத்து வெக்குறீங்க" . எனக்கெல்லாம் கூட செருப்பால் அடித்தது போல இருந்தது. Csk, MI, Parcilona, Brazil, India, Pakistan என உலக விளையாட்டு ரசிகர்கள் அனைவருக்குமே முகத்தில் அறையும். விளையாட்டில் இந்த பெருமை இல்லையென்றால் அது விளையாட்டு ரசிகர்களுக்கு ஆன்மா இல்லை என்பது போல பின்னிப்பிணைந்து. அந்த வகையில் இந்த விமர்சனம் எப்போதும் தனித்தன்மை வாய்ந்ததாக இருக்கும். தமிழ் பிரபா ரஞ்சித் இருவருக்கும் நன்றி.
சரி நாம் தலைப்பிற்கு வருமோம். ஹீரோயின் என்றாலே வெள்ளையாக சிவப்பாக இருக்க வேண்டுமா என்ன? திராவிடத்தின் அழகே கறுப்பு நிறம் தானே. ஒருவேளை அழகு என்பது Subjective. சிலருக்கு நிறமாக இருக்கலாம் சிலருக்கு மனமாக இருக்கலாம். மனம் மட்டுமே அழகு என்ற புரிதலுக்கு இன்னும் நான் பக்குவமடையவில்லை. ஆதலால் இப்போதைக்கு என்னைப் பொறுத்தவரை உடல் தான் அழகு. நிறம் முக்கியமே இல்லை. உடலை எவ்வளவு ஆரோக்கியமாக வைத்துக் கொள்கிறோம் என்பதிலேயே தான் இருக்கிறது. நிறம் நமது கைகளில் இல்லை. அது பிறப்பு அடிப்படையில் அமைகிறது. ஆனால் உடலை நமக்கு ஏற்றது போல் வைத்துக் கொள்ளலாம். சிலரது சோம்பேறித்தனத்தினால் குண்டாக இருப்பது எனது உரிமை என்கின்றனர். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. ஏகப்பட்ட நோய்கள் தான் வரும். சமூக வலைதளங்களில் எல்லாம் புரட்சி இல்லை என்றால் எல்லாமே கலாய்க்கப்படும்.
மாரியம்மாள் @ துஷாரா விஜயன் Dhusara vijayan படத்தில் பேசிய அனைத்து வசனங்களும் மனப்பாடம். அதற்கு காரணம் அந்த கதாபாத்திரத்தின் வார்ப்பு. அதையும் மீறி மனதிற்குள் நிற்க காரணம் துஷாரா தான். நடிப்பு அட்டகாசம். ஜீவனுள்ள கதையில் யாருமே பொருந்தி போகத்தான் வேண்டும். அதுவும் துஷாரா விடம் திராவிட அழகு ததும்பி வழிகிறது. அவரது இன்ஸ்டாகிராமில் இருந்து சில படங்கள்.
இன்ஸ்டாகிராமில் வீடியோவை ஒன்று இருக்கிறது. அதற்கு இசை அவ்வளவு பிடிக்கவில்லை ஆகவே அதை நான் எனக்கு பிடித்த இளையராஜா இசையோடு எடிட் செய்து பார்த்தேன். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டியது. பாலு மகேந்திரா மட்டும் உயிரோடு இருந்திருந்தால் அமலா பாலுக்கு பிறகு துஷாரா விஜயனையும் வைத்து இளையராஜா இசையில் ஒரு மான்டேஜ் பாடலுக்கு புல்வெளிகளில் கடற்கரை ஓரத்தில் நடக்க விட்டு எடுத்திருப்பார். அதை நாம் ஆயிரமாயிரம் முறை பார்த்து ரசித்து இருக்கலாம்.
பாலு மகேந்திரா அளவுக்கு திராவிட அழகை யாரும் மெனக்கெட்டு காட்டவில்லை. மேக்கப் பூசி காட்டவே முனைந்தனர். சில்க் ஸ்மிதா, ஷோபா, அர்ச்சனா போன்ற பேரழகிகளை அவரது படங்களில் மட்டுமே அத்தனை இயல்பாக அழகாக பார்க்க முடியும். ஏன் ராதிகா, ப்ரியாமணியை கூட அவரது படத்தில் தான் அத்தனை அழகுணர்ச்சியுடன் பார்க்க முடிந்தது. எனது நண்பன் நிஜந்தன் தீவிர பாலு மகேந்திரா ஷோபா கன்னி. அவன் சொல்லித்தான் தெரியும் பாலு மகேந்திரா ஹீரோயின்கள் எப்போதும் மூக்கை தொட்ட படி ஒரு பிரேமிலாவது இருப்பார்கள் என்று. ஆமாம் உண்மைதான். நீங்களும் பாலு மகேந்திரா பாடல்களை இன்னும் உன்னிப்பாக கவனித்து பாருங்கள்.
பாலு மகேந்திராவின் சில பாடல்கள் வைத்து நான் செய்த இந்த பாடல்கள் கீழே.
Comments
Post a Comment