ஆன்மாக்களின் ஜேப்படி- கானகன்:

2016 ஆம் ஆண்டு யுவபுரஸ்கர் விருது வென்ற, லஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் நாவல் பற்றிய எனது வாசிப்பு அனுபவம். இது ஒரு புலி வேட்டையில் தொடங்கி புலி அவனை வேட்டையாடுவதில் முடிவடைகிறது. தங்கப்பன் என்பவன் அந்த வேட்டைக்காரன். அவனுக்கு மூன்று மனைவிகள். மாரி, சகாயராணி, செல்லாயி. கடைசி மனைவியின் மகன் வாசி. வாசியின் தந்தை சடையன். தங்கப்பனின் நண்பன் அன்சாரி. இவர்களுடன் காடுகளும் புலிகளும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள். இதில் புலியின் நீதியுணர்ச்சியும் தகப்பன் மீது மகன் கொண்டிருக்கும் வெறுப்பும் தான் முக்கியம். அத்துடன் இந்நாவலில் ஆன்மாக்கள் பற்றி நிறையவே வருகிறது. அந்த ஆன்மாவை ஆராயும் ஒரு முயற்சி. கதை நடக்கும் காலகட்டம் எம்ஜிஆர் காலகட்டம். சரி. அந்தக் காலத்தில் மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி இருந்ததா ? பள்ளிக் கூடமும் இல்லை. உலகத்தையே துறந்து தனித்து வாழும் மக்களென எழுத்தாளரே தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த நிலையில் புலி வேட்டையின் போது ஃப்ளாஷ் லைட் உபயோகித்தாக எழுதுகிறார். இந்த கருவிகள் இந்த காலகட்டத்தில் இருந்ததா என்பது எல்லாம் தகவல்கள் குறைவு. எழுதப்படிக்காத சினிமா கூட பா...