அறைகுறையான ஆடை :

" அமலாபால் ஆடையின்றி நடித்திருக்கும் படம் ஆடை" என்றவாறு விளம்பரப்படுத்தி எடுக்கப்பட்ட படத்தை பற்றிய எனது பார்வையை முன்வைத்துள்ளேன். ஆடை டீசரில் இருந்த அடர்த்தி ட்ரெய்லரில் இல்லை என்பதை அனைவருமே அறிவர். படத்தில் அது எவ்வாறு இருந்தது?. முதலில் மையக் கதாபாத்திர வடிவமைப்பை பற்றியும் அதன் வளர்ச்சி வீழ்ச்சியில் திரைக்கதை எப்படி இருந்தது என்பதை சொல்ல விழைகிறேன். கோயிலுக்கு செல்ல விரும்பாத புடவை அணிய விரும்பாத மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பை தராத (இதிலேயும் கேள்வி குறி உள்ளது ஏனெனில் தாயின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து புடவையணிந்து செய்தி வாசிப்பது) சுவாரஸ்யத்திற்காக தனது அகங்காரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தற்கால பெமினிஸ்ட். இதில் பெமினிஸ்ட் என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஆரம்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்றிற்காக தான் பழிவாங்கப்படுகிறோம் என்பதை படத்தின் இறுதியில் மையக் கதாபாத்திரத்திற்கு தெரிகிறது. பார்வையாளர்களான நமக்கும் அப்போதுதான் தெரியும். உடனே மையக் கதாபாத்திரம் மனமாற்றம் அடைந்து விடுகிறது. அந்த முக்கியமான திரைக்கதையின் நம்பகத்தன்மை போலியான...