Selfie Shalu எனும் வசீயக்காரி :

Dance பிடித்தவர்களுக்கு 100% செல்பி ஷாலுவை பிடிக்கும் என்பது எனது அபிப்பிராயம். Without Passion இப்படி எல்லாம் ஆடவே முடியாது. அப்படியென்ன பெரிய டேன்ஸரா என்று கேட்பவர்களுக்காக இந்த ரைட்டப். சிறந்த டேன்சருக்கான, கூகுள் ஆண்டவரிடம் விசாரித்ததில் கிடைத்த பொதுவான சிறப்பம்சங்கள்: body, action, space, time and energy. நாம் பின்னிருந்து ஒவ்வொன்றாக வருவோம். முதலில் எனர்ஜி. செல்பி ஷாலுவிடம் அபாரமான எனர்ஜி இருக்கிறது. இதோ கீழே உள்ள பாடலை பாருங்கள். குட்டி ஜோதிகா | மினி ஜோதிகா | ஜோதிகா லைட் | ஜோதிகா தங்கச்சி என்று எத்தனை விதமாகவும் சொன்னாலும் அதே அர்த்தம் தான். அந்த அளவுக்கு நேர்த்தி. எனர்ஜி. கிரேஸ். நயன்தாராவுக்கு டான்ஸ் வராது. பிகில் படத்தில் நயன்தாரா கஷ்டப்பட்டு ஒரு டான்ஸ் ஆடியிருப்பார் விஜய்யுடன். அதில் ஆடத்தெரியாதவர்களின் சாயல் அப்படியே தெரியும். ஆடத்தெரியாமலும் அதை முயற்சி செய்யும் போதிலும் ஒரு அழகு தானாகவே வந்தடைந்திருக்கும் நயன்தாராவிடம் அந்த பாடலில். அதே imperfections ஐ perfect ஆக அந்த அழகமைதி குறையாமல் ஷெல்பி ஷாலு தனது வீடியோவில் கொண்டு வந்திருப்பார்....