இக்கால மாணவர்கள் : ஜெயமோகனும் எதிர் தரப்பினரும்
எவ்வளவோ பிரச்சினைகள் போய்க் கொண்டிருக்கிறது எல்லோரது வாழ்க்கையிலும். இதில் இதை பேச வேண்டுமா? ஆமாம். வரும் தலைமுறையே நமது பள்ளி மாணவர்கள் தான். அவர்களை பற்றி பேசுவது நமது குழந்தைகளை பற்றி பேசுவது போல மிகவும் முக்கியமானது. இன்ஸ்டாகிராமில் தான் முதன் முதலாக ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை இழிவாக பேசிவிட்டார் என்ற பதிவினை பார்த்தேன். அதை எழுதியவர் அழகிய பெரியவன். அவரது கதைகளையும் படித்துள்ளேன். இரண்டு முறை நேரில் சந்தித்து இருக்கிறேன். ஆனால் பேசியதில்லை. அவரது பதிவு லிங்க் இங்கே . அதை படித்து விட்டு ஜெயமோகன் என்ன எழுதியுள்ளார் என்றும் பார்த்து விடலாம் என்று பார்த்தேன். அதன் லிங்க் இங்கே . இரண்டையும் படித்து விட்டு மேற்கொண்டு படிக்கவும். ஜெயமோகனையும் வாசித்து இருக்கிறேன். முதலில் பெரும் ஈடுபாடு கொண்டு படித்து பின்னர் விலகியும் இருக்கிறேன். இருவரது கதைகள் பற்றி வேறொரு நாளில் கட்டுரை எழுத வேண்டும். சரி இப்போது இந்த பிரச்சினைக்கு வருவோம். ஜெயமோகன் அரசு பள்ளி மாணவர்களை மட்டுமே பார்ன் பார்ப்பதாக சொல்லியிருக்கிறார். உண்மையில் எல்லோருமே ( தனியார் பள்ளி மாணவர்கள் கூட ) பார்க்கி...