Ante sundaraniki ஏன் சிறந்த கமர்ஷியல் படம்?

ஹீரோ ஆக வேண்டும் என்ற ஆசை நமது தென்னிந்தியாவில் பிறந்த ஒவ்வொருவருக்கும் சிறுவயதில் இருக்கும் ஆசைதான். அப்படிப்பட்ட ஆசைக் கொண்ட சிறுவன் சந்திக்கும் முதல் முயற்சியே ஆகப் பெரும் தோல்வியில் முடியும். இதனால் இனிமேல் அந்த முயற்சியே கூடாதெனும் அப்பா. ஆதரவு தெரிவித்த அம்மாவும் தவறாகிவிட்டதற்கு குற்றவுணர்வில் தத்தளிக்கும் கதாபாத்திரம். ஐயர் குடும்பம். கலாச்சாரம் அது இது என்று கட்டுப்பாடுகள் நிறைந்த குடும்பம். ஹீரோ ஆகிறேனென செய்த சேட்டைகளே அவனை கேலி செய்யவும் உதவுகிறது. உண்மையில் ஒருவன் ஜெயிக்கும் முன்பு எதுவுமே பேசக்கூடாது. தோற்றுவிட்டால் அதுவே அவனை படுகுழியில் தள்ளிவிடும். அஞ்சான் லிங்குசாமி முதல் பீஸ்ட் நெல்சன் வரை பார்த்து விட்டோம். இப்படியாக நகைச்சுவையாக தொடங்கும் நானி கதாபாத்திரம் பிற்காலத்தில் ஹீரோ ஆனாரா இல்லையா என்பது மட்டுமே கதையல்ல. இந்த கதாபாத்திரம் வைத்துக்கொண்டு சகல மீறல்களையும் நிகழ்த்தியிருக்கிறார் இயக்குநர். ஏற்கனவே காதலித்து பிரிந்த ஹீரோயின். முதன் முறையாக காதலிக்கும் ஹீரோ. இதுவே தெலுங்கில் மிகப்பெரிய மீறல் தான். எவ்வளவு நாளைக்கு தான் ஆணின் காதலுக்கு பெண்...