கொட்டுக்காளி - திரை மொழியின் உச்சமா? எழுத்தின் அற்பத்தனமா?

ஒரு படைப்பின் படமாக்கல்முறை என்பது அதன் நோக்கத்தினால் தீர்மானிக்கப்பட வேண்டுமே அன்றி 'இப்படி எடுக்கலாம் அப்படி எடுக்கலாம்' என முன்தீர்மானித்துவிட்டு அதற்குள் கதையைக் கொண்டுவந்து அடைத்தால் அது துருத்திக் கொண்டுதான் தெரியும்! சினிமா என்பது காட்சி ஊடகம்; திரை மொழி என இயக்குநர் பி.எஸ்.வினோத் ராஜ் மூச்சுக்கு 300 முறை நேர்காணல்களில் கூறுகிறார். அவர் கூறியது முற்றிலும் உண்மை. ஆனால், அவர் செய்திருப்பது? அப்படியே தலைக்கீழானது. ஒரேயொரு பிரேமில் காட்சிப்படுத்த வேண்டிய விஷயங்களை 5-20 நிமிடங்கள்வரை ஏன் காட்ட வேண்டும்? எடிட்டிங் என்ற ஒன்று சினிமாவில் எதற்கு இருக்கிறது? இது மேடை நாடகமா? அல்லது ஆவணப் படமா? அதில்கூட இவ்வளவு நேரமிழப்பு இருக்காதுபோல! 20-30 நிமிடங்களில் எடுக்க வேண்டியதை 100 நிமிடங்கள் எடுத்திருப்பது எழுத்தில் போதிய சரக்கு இல்லை என்பதின் பிரதிபலிப்பே. சினிமாவில் நீளமான காட்சிகளுக்கு என்று ஒரு மரியாதை இருக்கிறது. முக்கியமான இடத்தில் வந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும். அல்லது 1971 படம் மாதிரி ஒரு த்ரில்லர் / உயிர் பிழைப்பு போன்ற நேரங்களில் அதைப் பயன்படு...