Posts

Showing posts from April, 2018

லேபிள் உலகம்

Image
Courtesy: pisasu film. அழகான குரலுடய சிறுமிகள் பெரும் புகழடைய மக்கள் எதிர்பார்க்கும் சிறந்த தகுதிகளில் முதன்மையானதும் அதி முக்கியமானதும் ஒன்றுண்டு அது அந்தச் சிறுமியின் விழியில் ஒளியில்லாததால் உண்டான "குருடி" எனும் லேபிளை. இரண்டாவது லேபிள் ஏழ்மையாகத்தான் இருக்க வேண்டும் மூன்றாவது லேபிள் அவளது உடல் வனப்பாக இருக்கலாம் இறுதியாக தான் அவளது ஆதார ஸ்ருதியான 'குரல்'வளமெனும் லேபிள். இந்த கவிதையில் கூட சிறுமி என்ற லேபிள் தான் பலசாலி சிறுவன் வந்திருந்தால் நோஞ்சானாயிருக்கும்.

தேகம் - சாரு நிவேதிதா

Image
இலக்கியத்தில் சுவாரஸ்ய போலிகளை கண்டறிதல் என்பது ஆரம்பக்கட்ட வாசகர்களுக்கு சற்று சவாலான விஷயம். சில ஜிகினாக்கல் கொண்டு எளிதாக ஏமாற்றிவிடும் விற்பன்னர்கள் அதிகம். தமிழில் இதற்கு உதாரணம் சாரு நிவேதிதா. அவரது தேகம் நாவலை இதற்கு சிறந்த உதாரணமாக சொல்லலாம். அதிர்ச்சி தரும் விஷயங்களை அடிக்கிக்கொண்டே போவதும் பாலியல் வறட்சியை எழுத்தில் கொட்டுவதும் தான் அவரது தாரக மந்திரம். அதுவும் அவரது சொந்த பராக்கிரமத்தை பறை சாற்றும் வரிகளே அதிகம். கதை என்று ஒன்று இருக்காமல் எழுதுவது அசோகமித்திரன் ஸ்டைல். அதை அடியொற்றி எழுதும் சாருநிவேதிதா தன்னையும் அசோகமித்திரனாக நினைத்துக் கொள்வது அபத்ததிற்கே அபத்தமாகும். அசோகமித்திரன் கதைகளில் கதாபாத்திரங்களின் வளர்ச்சி இருக்கும். ஜிகினா பூசாத எழுத்துக்கள் அசோகமித்திரனுடையது. சாருவின் கதாபாத்திரங்களின் வளர்ச்சி என்ற ஒன்று இருக்கவே இருக்காது. அவரது டையரியை கிழித்து கிழித்து நாவல், கட்டுரை என்ற பெயரில் எழுதி வருகிறார். கட்டுரைகளை கூட மன்னித்து விடலாம். நாவலை கொச்சைப்படுத்தும் இந்த பாணியை என்னவென்று சொல்வது. பத்தி எழுத்தாளர் என்பது எவ்வளவு பொருத்தம். வெங்காயத்தை உர...