தகப்பனை கண்டடைதல்
துருக்கிய இயக்குனர் Nuri Bilge Ceylonனின் The Wild Pear Tree என்ற படம் இந்த நூற்றாண்டின் சிறந்த படங்களுள் ஒன்று என்பது என் துணிபு. அதன் கரு தந்தையை கண்டடையதல். மாம்பழத்தின் கொட்டையை சுற்றி வளரும் சதைப்பகுதி போல படத்தின் கருவை சுற்றி இருக்கும் நிகழ்வுகள் மிகவும் ருசியானது. துருக்கியின் நிலப்பரப்பை அந்த நிலங்களின் மரங்களை காற்றினை நம் கண்களுக்கு முன்னால் இயக்குனரால் எளிமையாக காட்டிவிட முடிகிறது. லிட்ரலி நாம் அங்கு வசிக்க துவங்கி விடுகிறோம். Local is International என்ற வாக்கியத்தை நிறைவு செய்யும் படம். துருக்கியின் Nativityயை பார்த்தது போலவே இருந்தது. படத்தின் முக்கிய கதாபாத்திரம் கல்லுரியை முடித்து விட்டு ஆசிரியர் வேலைக்கு தேர்வு எழுத காத்திருக்கும் ஒருவன். கூடவே தான் எழுதிய நாவல் ஒன்றை பதிப்பிக்க பதிப்பகத்தாரை தேடித் திரிந்து கொண்டிருப்பான். அவ்வப்போது அவன் சந்திக்கும் மக்கள் அவர்களுடனான அவனது உரையாடல்கள் அனைத்துமே அவ்வளவு உயிர்ப்புடன் இருக்கும். முன்னால் காதலியுடன் ஒரு எழுத்தாளருடன் நண்பர்களுடன் பதிப்பகத்தாருடன் என்று எல்லாமே மனதில் நிற்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது. எல்லா ஆ