இலக்கியத்திலிருந்து சினிமா :

தலைப்பே சுவாரஸ்யமான ஒன்று. இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அன்பும் நன்றியும். இதைப்பற்றி திரைக்கதை எழுத்தாளர் எம் கே மணி அவர்கள் பேசிய வீடியோ முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன். அதைப்பற்றி சில வார்த்தைகள். பேச்சை ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி என சொல்லுவார்களே அது தெரிந்தது. இலக்கியத்தில் இருந்து சினிமா வந்தது சரியா தவறா? இலக்கியத்தில் இருந்து சினிமா சரியாக வந்திருக்கிறதா வரவில்லையா என்பதை பட்டிமன்றம் மாதிரி இல்லாமல் அதனதன் நியாயமான பக்கத்தில் இருந்து பேசுகிறேன் என்று சொன்ன புள்ளியே கவர்ந்தது. அதை சரியாகவும் பேசி முடித்தார். தமிழ் சினிமாவில் இலக்கியம் எப்படி இருக்கிறது? அதற்கிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை நியாயமான முறையில் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். இலக்கிய பரீட்சையும் உலக சினிமா பரீட்சையும் அத்துடன் தமிழ் சினிமாவில் நிஜமான உள்ளரசியல் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்துமே எம் கே மணி இதற்கு சரியான ஆள். மற்றவர்கள் யாரேனும் இருந்தாலுமே ஏதேனும் ஒன்றில் ஒருபக்க சார்புடையவர்களாக இருப்பார்கள். மணி ஸார் இரண்டிலும் balance...