கலையும் கொலையும் அதனுடன் பா.ரஞ்சித் எனும் கலைஞனும் :
கிரிக்கெட் விளையாடும் போது எப்படியோ புதிய ஷார்ட்ஸ் ஒன்றின் அடியில் லேசாக தையல் பிரிந்திருந்தது. டெய்லரிடம் சென்றால் பத்து ரூபாயில் முடிந்து விடும். ஆனால் சோம்பேறித்தனம். அதற்கு பதிலாக நானே ஊசி நூலைக் கொண்டு தைக்க முடிவெடுத்தேன். ஊசி நூலைத் தொட்டதெல்லாம் பால்யத்தில் தான். இப்போது உபயோகிக்கும் போது பழைய நினைவுகள் வந்தது. போகட்டும். கூடவே ஒரு கொரியன் படமும் நியாபகம் வந்தது. The way home. அதில் கடைசியாக அந்த சிறுவன் தனது பாட்டிக்காக நிறைய ஊசி-நூலைக் கோர்த்து விட்டு போவான். அந்த காட்சி இன்றளவும் என்னை உலுக்கக்கூடியது. ஒரு ஃபிரேமில் அன்பின் ஆழத்தை காட்ட முடியும் என்பதெல்லாம் சாத்தியம். இந்த படத்தில் எந்த வித ரொமான்டிஸமும் இல்லை என்பது தான் தனிச்சிறப்பு. அவ்வளவு சீக்கிரத்தில் அழமாட்டேன். ஆனால் இந்த காட்சி நினைவுக்கு வரும்போதெல்லாம் எனக்கு கண்ணீரை கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடுகிறது. இதன் திரைக்கதையை மட்டுமல்ல அந்த நடிகர்களையும் பாராட்டாமல் இருக்க முடியாது. பெரிய பெரிய தத்துவத்தை விட எளிதான ஒன்றை வெளிக்கொணர்வது தானே சிரமம். அதில் தானே கலை ஒளிந்துகொண்டு விளையாடுகிறது. கலை எ