Posts

அகாலம்

Image
இழவு வீட்டின் பிராதன ஊதுபத்தி வாசனை அந்த இடத்தை ஆக்கிரமித்து நெடுநேரமாகிறது. அதை அணையவிடாமல் மேலும் மேலும் எரியவைக்க ஒரு கூலியில்லா ஆளும் நியமிக்கப்பட்டிருந்தார். அழுது அழுது தொண்டை வற்றிப்போயி கோமதியம்மாள் நடையின் ஒரு மூலையில் சாய்ந்திருக்கிறாள். சில ஆட்களும் அதே கலைப்பில் அமைதியாக இருந்தனர். அந்த அமைதி சற்று பயங்கரமாக இருந்தது. நாங்கள் கொஞ்சம் தூரமாக ஒரு திண்ணையின் ஓரத்தில் இருந்தோம். எனக்கு அருகில் அமர்ந்திருந்த கோமதியம்மாளின் கணவர் ராமையாவுக்கு ஒரு செல்போன் அழைப்பு வந்து அந்த கணத்தை குழைத்தது. அழைப்பை எடுத்ததும் ," ரே மாப்ள பின்னிகா ஃப்ளைட் எக்கி ராரா. சந்தோஷூ பாய்ல படி சச்சிபோயினாடுரா...." என்று தங்கள் மேல் குற்றமில்லை என்பதை அழுதுக்கொண்டே நிரூபிக்க போராடினார். மறுமுனையில் என்ன பேசினார் என்று தெரியவில்லை. அழைப்பை துண்டித்ததும் அவர் " ஞேனு ஏன்டிக்கு ஏடித்துதனே தெல்லேதுரா ஞைனா..." என்று எனது தோலை பிடித்தார்.  அழுது ஓய்ந்திருந்த கூட்டம் புத்துயிர்ப்பு அடைந்தது.  கோமதியம்மாளே ஆரம்பித்தாள். " ஐயோ... மா அல்லுடு ஒச்சி அடுக்குதுடே ஞேனு ஏமி செப்பேதி.. நா தெகிர உந்...

ரூஹ் - லஷ்மி சரவணக்குமார்.

Image
விமர்சனம் என்பது நல்ல படைப்புகள் பற்றி மட்டுமே எழுதுவது என்ற குறுகிய பார்வை நிலவி வருகிறது. கட்டுரை போட்டிகளில் இதுவரை பரிசு பெற்ற கட்டுரைகள் எல்லாம் அந்த வகையிலே இருப்பது ஆரோக்கியமானதாக தோன்றவில்லை. எனது அனுபவம் கசப்பாகவே இருந்து வருகிறது.  விமர்சனம் என்பது எந்த படைப்பு பற்றியும் தனதளவில் நேர்மையான ஒன்றாக இருந்தால் போதும். மேலும் நல்ல படைப்பை விட சுமாரான படைப்புகளுக்கும் மோசமான படைப்புகளுக்கும் தான் விமர்சனங்கள் தேவைப்படுகிறது என்பது என்னுடைய திடமான கருத்து. ( அழிசி கட்டுரைப் போட்டி 2019 க்கு எழுதப்பட்டது. தேர்வாகும் தகுதியில்லை என்று முடிவு வெளியிடப்பட்டது 😂). விதிமுறைகளின் படி நான் எடுத்துக் கொண்ட நாவல் - ரூஹ். லட்சுமி சரவணகுமார் எழுதியது. அமேசான் கிண்டலில் கிடைக்கிறது. விலை ₹45 மட்டுமே. "தேடிக் கண்டடைந்த யாவும் பின்னொரு நாள் துறப்பதற்கே..". என்ற முன்னுரை தலைப்பிலேயே கதையின் மையத்தை ஆசிரியர் தெளிவு படுத்திவிடுகிறார். இது நாவலில் எவ்வாறு தொழிற்பட்டு இருக்கிறது என்பதை பார்ப்போம்.  ஆரம்ப நிகழ்வு நம்மை கதைக்குள் இழுத்து செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. திர...

அறைகுறையான ஆடை :

Image
" அமலாபால் ஆடையின்றி‌ நடித்திருக்கும் படம் ஆடை" என்றவாறு விளம்பரப்படுத்தி எடுக்கப்பட்ட  படத்தை பற்றிய எனது பார்வையை முன்வைத்துள்ளேன். ஆடை டீசரில் இருந்த அடர்த்தி ட்ரெய்லரில் இல்லை என்பதை அனைவருமே அறிவர். படத்தில் அது எவ்வாறு இருந்தது?.  முதலில் மையக் கதாபாத்திர வடிவமைப்பை பற்றியும் அதன் வளர்ச்சி வீழ்ச்சியில் திரைக்கதை எப்படி இருந்தது என்பதை சொல்ல விழைகிறேன். கோயிலுக்கு செல்ல விரும்பாத புடவை அணிய விரும்பாத மற்றவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பை தராத (இதிலேயும் கேள்வி குறி உள்ளது ஏனெனில் தாயின் உணர்ச்சிக்கு மதிப்பளித்து புடவையணிந்து செய்தி வாசிப்பது) சுவாரஸ்யத்திற்காக தனது அகங்காரத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தற்கால பெமினிஸ்ட். இதில் பெமினிஸ்ட் என்பதற்கான வரையறை ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது. ஆரம்பத்தில் நடந்த நிகழ்வு ஒன்றிற்காக தான் பழிவாங்கப்படுகிறோம் என்பதை படத்தின் இறுதியில் மையக் கதாபாத்திரத்திற்கு தெரிகிறது. பார்வையாளர்களான நமக்கும் அப்போதுதான் தெரியும். உடனே மையக் கதாபாத்திரம் மனமாற்றம் அடைந்து விடுகிறது. அந்த முக்கியமான திரைக்கதையின் நம்பகத்தன்மை போலியான...

ஆன்மாக்களின் ஜேப்படி- கானகன்:

Image
2016 ஆம் ஆண்டு யுவபுரஸ்கர் விருது வென்ற, லஷ்மி சரவணகுமார் எழுதிய கானகன் நாவல் பற்றிய எனது வாசிப்பு அனுபவம். இது ஒரு புலி வேட்டையில் தொடங்கி புலி அவனை வேட்டையாடுவதில் முடிவடைகிறது. தங்கப்பன் என்பவன் அந்த வேட்டைக்காரன். அவனுக்கு மூன்று மனைவிகள். மாரி, சகாயராணி, செல்லாயி. கடைசி மனைவியின் மகன் வாசி. வாசியின் தந்தை சடையன். தங்கப்பனின் நண்பன் அன்சாரி. இவர்களுடன் காடுகளும் புலிகளும் தான் முக்கியமான கதாபாத்திரங்கள். இதில் புலியின் நீதியுணர்ச்சியும் தகப்பன் மீது மகன் கொண்டிருக்கும் வெறுப்பும் தான் முக்கியம். அத்துடன் இந்நாவலில் ஆன்மாக்கள் பற்றி நிறையவே வருகிறது. அந்த ஆன்மாவை ஆராயும் ஒரு முயற்சி.   கதை நடக்கும் காலகட்டம் எம்ஜிஆர்  காலகட்டம். சரி. அந்தக் காலத்தில் மலைவாழ் மக்களுக்கு மின்சார வசதி இருந்ததா ? பள்ளிக் கூடமும் இல்லை. உலகத்தையே துறந்து தனித்து வாழும் மக்களென எழுத்தாளரே தெளிவாக குறிப்பிடுகிறார். இந்த நிலையில் புலி வேட்டையின் போது ஃப்ளாஷ் லைட் உபயோகித்தாக எழுதுகிறார். இந்த கருவிகள் இந்த காலகட்டத்தில் இருந்ததா என்பது எல்லாம் தகவல்கள் குறைவு. எழுதப்படிக்காத சினிமா கூட பா...

சிறுபான்மை எனும் மூடத்தனம் :

Image
பெரும்பான்மைக்கு எதிராக குதிக்கும் சிறுபான்மையில் இருக்கும் அதிகாரத்தை யாரும் எதிர்த்து பேசுவதில்லை. அதிலுருக்கும் குறைகளை தெரிந்துமே கூட வாயைத் திறந்து பேசுவதில்லை. இதை முன்னிருத்தி பேசுவதே கூட தேசத்துரோகத்தை விட குற்றமாக கருதப்படுகிறது. இல்லை  இல்லை தேசத்துரோகம் என்ற வார்த்தையே வழக்கொழிந்து போயிற்று. அநியாயத்தை கண்டால் பொங்கும் போராளிகள் போல நேர்மைக்கு மாறான ஒன்றாக கருதும் சிறுபான்மையில் நடக்கும் மூடத்தனத்தை எதிர்த்து சில மனக்குமுறல்கள். இந்தியாவின் சிறுபான்மை மதமான இசுலாம் கிறித்தவம் மதங்களில் இருக்கும் குரான் பைபிளில் இருந்து நீங்கள் எந்த ஒரு வார்த்தையையும் சேர்க்கவும் முடியாது. பிரிக்கவும் முடியாது. பைபிள் ஆவது புதிய ஏற்பாடு வந்தது. ஆனால் குரானில் ஒரு வார்த்தை கூட மாறுவதற்கு வாய்ப்பு இல்லை. வழக்கொழிந்து போன கையேடுகளை இன்னமும் புனிதத்தன்மை மாறாது பாதுகாப்பதில் இருக்கும் சூட்சுமம் என்ன? கேரள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பெண்கள் செல்லலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறேன். பழைமை எனும் பெயரில் மூடத்தனம் மிகுந்திருக்கிறது. கடவ...

இலக்கியத்திலிருந்து சினிமா :

Image
தலைப்பே சுவாரஸ்யமான ஒன்று. இந்த தலைப்பை தேர்ந்தெடுத்தவர்களுக்கு அன்பும் நன்றியும். இதைப்பற்றி திரைக்கதை எழுத்தாளர் எம் கே மணி அவர்கள் பேசிய வீடியோ முக்கியமான ஒன்றாக நினைக்கிறேன்.  அதைப்பற்றி சில வார்த்தைகள். பேச்சை ஆரம்பித்த விதம் பிடித்திருந்தது. நல்ல தொடக்கம் பாதி வெற்றி என சொல்லுவார்களே அது தெரிந்தது. இலக்கியத்தில் இருந்து சினிமா வந்தது சரியா தவறா? இலக்கியத்தில் இருந்து சினிமா சரியாக வந்திருக்கிறதா வரவில்லையா என்பதை பட்டிமன்றம் மாதிரி இல்லாமல் அதனதன் நியாயமான பக்கத்தில் இருந்து பேசுகிறேன் என்று சொன்ன புள்ளியே கவர்ந்தது. அதை சரியாகவும் பேசி முடித்தார். தமிழ் சினிமாவில் இலக்கியம் எப்படி இருக்கிறது? அதற்கிடையே எவ்வளவு தூரம் இருக்கிறது என்பதை நியாயமான முறையில் சொல்வதற்கு ஒரு தகுதி வேண்டும். இலக்கிய பரீட்சையும் உலக சினிமா பரீட்சையும் அத்துடன் தமிழ் சினிமாவில் நிஜமான உள்ளரசியல் தெரிந்த ஒருவராக இருக்க வேண்டும். எனக்கு தெரிந்துமே எம் கே மணி இதற்கு சரியான ஆள். மற்றவர்கள் யாரேனும் இருந்தாலுமே ஏதேனும் ஒன்றில் ஒருபக்க சார்புடையவர்களாக இருப்பார்கள். மணி ஸார் இரண்டிலும் balance...

மொழிபெயர்ப்பில் மெத்தனம் -1:

Image
மொழிபெயர்ப்பு சுயமாக எழுதுவதை விடவும் ஒரு வகையில் கடினமானது. அதி ஜாக்கிரதையாக, இம்மி பிசகாத துல்லியத்துடன் செய்யப்பட வேண்டியது. மொழிபெயர்ப்பாளர் கதை சொல்லியாக உருமாறினாலொழிய மூலத்திற்கு நியாயம் செய்ய முடியாது. குறிப்பிட்ட அரசியல்-கலாச்சார சூழல், மனநிலை, மொழி இவற்றின் புரிதல் அவருக்கு எந்த அளவுக்கு சாத்தியமாகிறதோ அந்த அளவுக்குத்தான் மொழிபெயர்ப்பின் சிறப்பு இருக்கும்.                        ~அமரந்தா . நடுகல் இதழில் வெளிவந்த வே.நி.சூர்யா அவர்களின் மொழிபெயர்ப்பை கீழே படிக்கலாம். இது franz kafkaவின் The vulture எனும் கதையின் மொழிபெயர்ப்பு. Franz kafka //                  வல்லூறு: வல்லூறு ஒன்று என் பாதங்களை கொத்திக்கொண்டிருந்தது. அது ஏற்கனவே என் பூட்ஸை கிழித்து காலுறைகளை கந்தலாக்கிவிட்டது. இப்போது என் பாதங்களை கொத்திக் கொண்டிருக்கிறது. மீண்டும் மீண்டும் என் பாதங்களை அது கொத்தியது. ஓய்வின்றி அப்பறவை என்னை பலமுறை வட்டமிட்டது. பின்னர்...