டி20 கிரிக்கெட்டில் கொம்பன்..! ஆனால், டெஸ்ட்டுகளில்?
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரை 3-1 என்ற கணக்கில் வென்றுள்ள இந்தியா அடுத்து 2-3 வருடங்களுக்கு டி20 கிரிக்கெட்டில் உலகை ஆளும் என்றே கணிக்கிறேன். மாறாக, டெஸ்ட் போட்டிகளில் மண்ணைக் கவ்வும். அதற்கான காரணங்களை பார்ப்போம். முதலும் முக்கியக் காரணமாக ஐபிஎல் தொடரைச் சொல்லலாம். தெரிந்தோ தெரியாமலோ பிசிசிஐ இதைக்கொண்டு வந்தது மிகப்பெரிய நல்லது. (பாதகமும் இருக்கிறது கடைசியில்) இந்தியாவில் எவ்வளவு திறமைசாலிகள் இருக்கிறார்கள் என்பதை உலகத்துக்கு வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு தொடராகவே ஐபிஎல் இருக்கிறது. இந்தியாவுக்கு தொடக்க வீரர்களாக மட்டுமல்ல எல்லா இடங்களிலும் களமிறங்க பல பல வீரர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள். இந்தியா ஏ, பி, சி, டி என 4 அணிகளை உருவாக்கும் அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள் என்பதே நம்பமுடியாத உண்மை. தொடக்க வீரர்களுக்கு - ஷுப்மன் கில், ஜெய்ஸ்வால், அபிஷேக், சாம்சன், ருதுராஜ், இஷான் கிஷன், படிக்கல். 3,4ஆம் இடத்துக்கு - சூர்ய குமார், ஷிவம் துபே,திலக் வர்மா, ரிஷப் பந்த், ஸ்ரேயாஷ், கே.எல்.ராகுல், துருவ் ஜூரேல், ஷஷாங் சிங், ரமன்தீப் சிங், சாய் சுதர்சன், ரஜத் படிதார்....