இடையில் ஓடும் நதி - கூகி வா திவாங்கோ

இது கிக்கியு மொழியில் எழுதப்பட்ட கென்ய நாவல் பிறகு ஆசிரியர் கூகிவா திவாங்கோவினாலே (Ngũgĩ wa Thiong'o) ஆங்கிலத்திலும் மொழிபெயர்க்கப்பட்டது. The river between என்று கூகிளில் தேடினால் கிடைக்கும். தமிழில் இரா.நடராசன் மொழிபெயர்த்துள்ளார். ஆங்கிலம் தெரியாத என்னைப் போன்ற தற்குறிகள் தமிழிலேயே படிக்கலாம். மொழிபெயர்ப்பு குறித்து கருத்து தெரிவிக்கும் சாகித்யம் எனக்கு இல்லை என்றாலும் படிக்க நன்றாகவே இருந்தது. கென்யாவின் பழங்குடி மக்களின் பற்றிய கதை. அந்த மக்களின் கலாச்சார வாழ்வியலை பேசுகிறது. கலாச்சாரம் என்பதே காலத்திற்கேற்ப மாறக்கூடிய ஒன்று. பழையன கழிந்து புதுமை புகுத்தலே மனித நாகரிகத்தின் வளர்ச்சி படிநிலையை காட்டுகிறது. அதனுடன் காலனித்துவ எதிர்ப்பு அரசியலை எவ்வாறு பின்னி பிணைந்து கொண்டு எழுதியுள்ளார் என்பது தான் இந்த நாவலை தட்டையான ஒன்றிலிருந்து பல பரிமாணங்கள் கொண்டுள்ள ஒன்றாக மாற்றியது எனலாம். ஆண்களின் பிறப்புறுப்பு முன்தோலை அகற்றும் பழக்கத்தையும் பெண்களின் க்ளிட்டோரிஸை கீறி விடும் அறுப்பு பழக்கத்தை கொண்ட பழமையான மக்களின் வாழ்வியல் அங்கு வரும் ஆங்க...